விளையாட்டு

தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தால் இந்த பிரச்சனை நிச்சயம் வரும்.. இந்திய அணி முன்னாள் வீரர் கருத்து !

தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணிக்கு புதிய பிரச்சினைதான் உண்டாகும் என முன்னாள் வீரர் சாபா கரீம் கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்  அணியில் இருந்தால் இந்த பிரச்சனை நிச்சயம் வரும்.. இந்திய அணி முன்னாள் வீரர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

தினேஷ் கார்த்திக்  அணியில் இருந்தால் இந்த பிரச்சனை நிச்சயம் வரும்.. இந்திய அணி முன்னாள் வீரர் கருத்து !

அதில் சிறப்பான ஆடிய அவர் உலகக்கோப்பை அணியில் தனது பெயரை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார். பல்வேறு முன்னணி வீரர்களும் அவரை பாராட்டி வருகின்றனர். ஆனால் கடைசியாக ஆடிய சில போட்டிகளில் அவர் சோபிக்க தவறியதால் சில முன்னணி வீரர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணிக்கு பிரச்சினைதான் உண்டாகும் என முன்னாள் வீரர் சாபா கரீம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் "இந்திய அணியின் டாப் ஆர்டர் தற்போது நல்ல பலமாக உள்ளது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், பண்ட், தினேஷ் கார்த்திக்,ஹர்திக் பாண்ட்யா என 7 வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த 7 பேருக்குமே இடம் கொடுத்தால் வெறும் 4 பவுலர்கள்தான் இந்தியாவுக்கு மீதம் இருப்பார்கள்.

தினேஷ் கார்த்திக்  அணியில் இருந்தால் இந்த பிரச்சனை நிச்சயம் வரும்.. இந்திய அணி முன்னாள் வீரர் கருத்து !

அணியின் 5வது பவுலராக ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்களையும் வீசலாம். ஆனால் 5 பவுலர்களை வைத்துக்கொண்டு டி20ல் ஆடுவதை ரோகித் சர்மா விரும்பமாட்டார். எனவே பாண்ட்யாவை 6வது பவுலராக வைத்துவிட்டு, பவுலிங்கிற்கு என்று மற்றொரு வீரர் சேர்க்கபடவேண்டும். அப்படி சேர்த்தால் 7 பேட்ஸ்மேன்களில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும். அந்த ஒருவர் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோர்தான். எனவே இதில் ரோகித் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories