விளையாட்டு

"ஊ சொல்றியா மாமா.." - Florida கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குத்தாட்டம் போட்ட வீரர்கள் : Viral Video !

Florida கிரிக்கெட் ஸ்டேடியத்தில் "ஊ சொல்றியா மாமா.." பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"ஊ சொல்றியா மாமா.." - Florida கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குத்தாட்டம் போட்ட வீரர்கள் : Viral Video  !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் 'புஷ்பா'. இயக்குநர் சுகுமார் இயக்கிய இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

"ஊ சொல்றியா மாமா.." - Florida கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குத்தாட்டம் போட்ட வீரர்கள் : Viral Video  !

இப்படம் வெளியாவதற்கு முன்பு பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக 'அய்யா சாமி..', 'ஸ்ரீவள்ளி..', 'ஊ சொல்றியா மாமா..' பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் டிக்டாக், ரீல்ஸ் செய்து மகிழ்ந்தனர். மேலும் இந்த படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுத்தந்தது. இதையடுத்து ரசிகர்கள் இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர்.

"ஊ சொல்றியா மாமா.." - Florida கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குத்தாட்டம் போட்ட வீரர்கள் : Viral Video  !

இதனிடையே 'ஊ சொல்றியா மாமா..' பாடலுக்கு சமந்தா ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். இப்படத்தை சமந்தாவுக்காக பார்க்க வந்த ரசிகர்களும் ஏராளம். சுமார் 8 மாதங்களுக்கு முன்பு வெளியான சமந்தா ஆடிய இந்த பாடலுக்கு ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்தாலும், ரசிகர்கள் தற்போதும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவிலுள்ள புளோரிடா நகரில் நடந்து முடிந்த T20I ஆட்டத்தின் போது, ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமந்தா பாடலான தெலுங்கில் வெளியான 'ஊ அண்டாவா..' பாடலுக்கு நடனமாடி மகிழ்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories