விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்.. வெல்லப்போவது யார்? புள்ளிப்பட்டியலின் நிலை என்ன ? இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறதா ?

செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதிசுற்று இன்று நடைபெறும் நிலையில் வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்.. வெல்லப்போவது யார்? புள்ளிப்பட்டியலின் நிலை என்ன ? இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறதா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செஸ் போட்டியில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்,வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்.. வெல்லப்போவது யார்? புள்ளிப்பட்டியலின் நிலை என்ன ? இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறதா ?

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றோடு முடிவடைகிறது. அதன் பின்னர் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா பிரமாண்டமாக நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய 11 சுற்று போட்டியில், ஓபன் பிரிவில் ஜெர்மனி அணியோடு இந்திய பி அணி விளையாடி வருகிறது. இந்தியா A அணி அமெரிக்காவோடு விளையாடி வருகிறது. இரு அணிகளில் ஒன்றுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்.. வெல்லப்போவது யார்? புள்ளிப்பட்டியலின் நிலை என்ன ? இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்கிறதா ?

தற்போதைய நிலையில் தரவரிசையில் முதல் இடத்தில் உக்பெக்கிஸ்தான் அணி 6வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆர்மேனியா அணி 7ம் இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளின் முடிவை பொறுத்தே இந்தியா பதக்கத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓபன் பிரிவில் இந்திய B அணி 3ம் இடத்திலும், இந்தியா A அணி 4ம் இடத்திலும் இருக்கிறது. இந்திய C அணி 28ம் இடத்தில் இருக்கிறது.

இதேபோல மகளிர் பிரிவில் இந்தியா A அணி முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இன்றைய போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா A அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றாலே முதல் இடத்தை பிடிக்கும். இந்தியா B அணி 6ம் இடத்தில் உள்ள நிலையில், இந்தியா C அணி 9ம் இடத்தில் உள்ளது.

banner

Related Stories

Related Stories