விளையாட்டு

டி20 உலக கோப்பையில் ரவிச்சந்திரன் அஷ்வின் இருக்க வேண்டும்: ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் பயிற்சியாளர்!

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஶ்ரீதர் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பையில் ரவிச்சந்திரன் அஷ்வின் இருக்க வேண்டும்: ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் பயிற்சியாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியாவில் நடக்கப்போகும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 2 மாதங்களில் இந்திய அணி புரப்பட்டுவிடும். இன்னும் சில வாரங்களில் இந்திய அணியின் தேர்வுக்குழு இந்த உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வல்லுநர்கள், முன்னாள் இந்திய வீரர்கள் என ஒவ்வொருவரும் இந்திய அணி இப்படித்தான் இருக்கவேண்டும், இவர்கள் இடம்பெறவேண்டும் என்று தங்களின் கருத்துகளைக் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய அணியும் பல வீரர்களை அடுத்தடுத்த தொடர்களில் முயற்சி செய்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் கடந்த 10 மாதங்களாக பல்வேறு வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு இடத்திலும் யார் விளையாடுவர்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஶ்ரீதர், இந்தத் தொடருக்கு ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரரை இந்திய அணி தேர்வு செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

டி20 உலக கோப்பையில் ரவிச்சந்திரன் அஷ்வின் இருக்க வேண்டும்: ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் பயிற்சியாளர்!

சமீபத்தில் தான் கொடுத்த ஒரு பேட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு ஜாம்பவான் ஸ்பின்னர் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஶ்ரீதர். டி20 போட்டிகளில் தன் திறமையை அவர் பல முறை நிரூபித்திருப்பதால் இந்திய அணியின் உலகக் கோப்பை ஸ்குவாடில் அவர் இடம்பெறவேண்டும் என்று கூறியிருக்கிறார் அவர்.

இந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த ஸ்பின்னர் இடம் பெறவேண்டும் என்ற விவாதித்தின்போது இப்படிக் கூறியிருக்கிறார் ஶ்ரீதர். தான் இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்தால், அதில் யுஸ்வேந்திர சஹால் தான் சுழற்பந்துவீச்சுக்கு முதல் தேர்வாக இருப்பார் என்று கூறியிருக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இருப்பார் என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

டி20 உலக கோப்பையில் ரவிச்சந்திரன் அஷ்வின் இருக்க வேண்டும்: ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் பயிற்சியாளர்!

"புவனேஷ்வர் குமார், ஷமி இருவரையும் உங்களால் போட்டியின் இரண்டு கட்டங்களிலும் பந்துவீச வைக்க முடியும். இப்போது ஹர்திக் பாண்டியா தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருக்கிறார். ஆல்ரவுண்டர் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும் இருப்பதால், ஐந்தாவது மற்றும் ஆறாவது பௌலருக்கான பிரச்சனை தீர்ந்துவிட்டது. அதில் ஸ்பின்னராக கிராண்ட் மாஸ்டர் சஹாலை இணைத்தால் பௌலிங் யூனிட் சிறப்பாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை அந்த பௌலிங் யூனிட்டோடுதான் இந்தியா இந்த உலகக் கோப்பையில் விளையாடவேண்டும். இந்திய அணிக்கு ஏதேனும் கடினமான சூழ்நிலைகள் வந்துவிட்டால் அங்கு அணிக்கு உதவ ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின் இருப்பார். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அவரால் பல விஷயங்கள் செய்ய முடியும்" என்று கூறினார் ஶ்ரீதர்.

இருந்தாலும், இந்த டி20 உலகக் கோப்பைக்கான ஸ்குவாடில் அஷ்வின் இடம்ப்றுவது சரியான முடிவாக இருக்காது என்று பலரும் கருதுகின்றனர். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது சர்வதேச டி20 தொடரின்போது இதுபற்றிப் பேசிய இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த், அஷ்வினை இந்திய அணியில் சேர்த்திருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.

டி20 உலக கோப்பையில் ரவிச்சந்திரன் அஷ்வின் இருக்க வேண்டும்: ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் பயிற்சியாளர்!

"இது மிகப் பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. அஷ்வினின் தேர்வைப் பொறுத்தவரை நான் மிகவும் குழப்பம் அடைந்திருக்கிறேன். அவர் ஏன் அணியில் இருந்து கழட்டிவிடப்படவில்லை, அதன் பிறகு அவர் ஏன் அணியில் விளையாடவில்லை, இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் அவர் ஏன் விளையாடவில்லை, இப்போது திடீரென வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஏன் விளையாடவில்லை. எதுவுமே புரியவில்லை. இது எல்லோரையுமே குழப்பிக்கொண்டுதான் இருக்கிறது.

அணியில் உங்களின் முதல் சுழற்பந்துவீச்சாளாராக ஜடேஜா தான் இருக்கப்போகிறார். அவர் போக யுஸ்வேந்திர சஹால், அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் இருக்கின்றனர். இவர்கள் நால்வரில் யாரேனும் இருவர் மட்டும் தான் உலகக் கோப்பைக்குச் செல்லபோகிறார்கள். எனக்கு அஷ்வினின் வாய்ப்பு பற்றித் தெரியவில்லை. இருந்தாலும், ஒரு ஆல்ரவுண்டராக அவர் செயல்பட முடியும் என்பது அவருக்கு சாதகமாக அமையலாம். ஆனால் என்னுடைய முதல் தேர்வு சஹாலாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் லெக் ஸ்பின்னர்" என்று கூறியிருந்தார் ஶ்ரீகாந்த்.

banner

Related Stories

Related Stories