விளையாட்டு

சிராஜ், தீபக் ஹூடாவை மட்டும் தனியே பாராட்டிய இந்திய அணி கேப்டன்.. காரணம் என்ன?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய சிராஜ், தீபக் ஹூடா ஆகியோரை இந்திய அணி கேப்டன் தவான் பாராட்டியுள்ளார்.

சிராஜ், தீபக் ஹூடாவை மட்டும் தனியே பாராட்டிய இந்திய அணி கேப்டன்.. காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியை அபாரமாக வென்று அசத்தியிருக்கிறது இந்திய அணி. போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, இந்தத் தொடரை 3-0 என வென்று வெஸ்ட் இண்டீஸ் அணியை வைட் வாஷ் செய்திருக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 36 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 258 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா இரண்டாவது முறையாக வைட் வாஷ் செய்திருக்கிறது. இதற்கு முன் பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை 3-0 என வென்றது இந்தியா.

சிராஜ், தீபக் ஹூடாவை மட்டும் தனியே பாராட்டிய இந்திய அணி கேப்டன்.. காரணம் என்ன?

இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட சீனியர் வீரர் ஷிகர் தவான் இந்திய அணியின் செயல்பாட்டையும் சில வீரர்களின் செயல்பாட்டையும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். இந்தத் தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் பலரின் கவனத்தையும் பெற்றார். இந்தத் தொடரில் அவர் மொத்தம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் அவர் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் பெரிய ஸ்கோரை சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அப்போதே பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. இந்தத் தொடரில் சிராஜின் செயல்பாட்டை பாராட்டிய தவான், கடந்த சில ஆண்டுகளில் அவர் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

"அவர் மிகவும் திறமை மிகுந்த பௌலர். அவர் விளையாடத் தொடங்கி வெகு காலம் ஆகிவிட்டது. அந்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கிறது. அவருடைய தன்னம்பிக்கை அபாரமானது. சில நேரங்களில் ஏதாவது ஒரு ஃபீல்டரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கவைத்தால், 'இல்லை. அது எனக்கு வேண்டாம்' என்று உடனடியாக என்னிடம் வந்து சொல்லிவிடுவார். அதோடு வேறு எந்த இடத்தில் ஃபீல்டரை நிற்க வைக்க வேண்டும் என்பதையும் சொல்வார். அது எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று போட்டிக்குப் பின்பான பரிசளிப்பு விழாவில் கூறினார் ஷிகர் தவான்.

சிராஜ், தீபக் ஹூடாவை மட்டும் தனியே பாராட்டிய இந்திய அணி கேப்டன்.. காரணம் என்ன?

"இன்று அவர் 2 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். அவருக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியும். ஒரு கேப்டனாக என் வேலைகளை அது எளிதாக மாற்றிவிடுகிறது. உங்கள் வீரர்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை தெரிந்துவைத்திருக்கும்போது அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வேகம், ஸ்விங் என அனைத்தும் கலந்து அவர் பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது" என்று சிராஜை பாராட்டியிருக்கிறார் தவான்.

சிராஜ் பற்றி மட்டுமல்லாமல், தீபக் ஹூடா பற்றியும் பேசியிருக்கிறார். இந்த ஒருநாள் தொடரில் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்ட ஹூடா, சிறப்பாகப் பந்துவீசினார். இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலுமே பந்துவீசிய அவர், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 9 ஓவர்கள் பந்துவீசி 42 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

"இந்தத் தொடருக்கு முன்பு அவரை ஆல் ரவுண்டராகப் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் யோசித்தோம். அவர் முதல் போட்டியில் விளையாடிய விதம் அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. நான்கு அல்லது ஐந்து ஓவர்களுக்குப் பதிலாக 7 முதல் 8 ஓவர்கள் வரை கூட அவரால் பந்துவீச முடியும் என்று நம்பினோம். அவரால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் நன்றாகப் பந்துவீச முடியும். இரண்டாவது போட்டிக்குப் பின்பு அதைப் புரிந்து கொண்ட நான், மூன்றாவது போட்டியில் அவரை வைத்துப் பந்துவீச்சைத் தொடங்க முடிவு செய்தேன். அவர் மெய்டன் வீசி சிறப்பாகத் தொடங்கினார்" என்று கூறினார் தவான்

banner

Related Stories

Related Stories