விளையாட்டு

"யாராலும் விராட் கோலியை அணியில் இருந்து கழட்டிவிட முடியாது" -ஆவேசமான பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய தேர்வாளர்கள் யாராலும் விராட் கோலியை அணியில் இருந்து கழட்டிவிட முடியாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் லடீஃப் கூறியுள்ளார்.

"யாராலும் விராட் கோலியை அணியில் இருந்து கழட்டிவிட முடியாது" -ஆவேசமான பாகிஸ்தான் முன்னாள் வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா ஆடும் சர்வதேச டி20 தொடருக்கான அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறதா இல்லை அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டாரா என்று தெரியவில்லை. தேர்வுக் குழுவும் அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 18 பேர் கொண்ட அணியில் ஜஸ்ப்ரித் பும்ராவும் இடம்பெறவில்லை.

இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாததால் நிறைய குழப்பங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. ஒரு சிலர், கோலி தனக்கு ஒரு சிறு விடுப்பு வேண்டும் என்று இந்தத் தொடரில் இருந்து ஓய்வு கேட்டதாகவும் அதனால் அவர் அணியில் இடம்பெறவில்லை என்றும் கூறுகின்றனர். இன்னொருபக்கம், கோலியின் ஃபார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் அவர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

"யாராலும் விராட் கோலியை அணியில் இருந்து கழட்டிவிட முடியாது" -ஆவேசமான பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

ஆனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லடிஃப், இந்திய தேர்வாளர்கள் யாராலும் விராட் கோலியை அணியில் இருந்து கழட்டிவிட முடியாது என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லடீஃப், விராட் கோலியின் சராசரியை சுட்டிக் காட்டியிருக்கிறார். 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 38 என்ற சராசரி வைத்திருக்கிறார் கோலி. 10 அரை சதங்கள் அடித்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை அனைவரும் டார்கெட் செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் லடிஃப்.

"மற்ற வீரர்களின் சொதப்பல்களுக்கும் சேர்த்து கோலி பலிகடா ஆக்கப்படுகிறார். 2019 உலகக் கோப்பையைப் பாருங்கள், கடைசியாக நடந்த டி20 உலகக் கோப்பையைப் பாருங்கள்... கோலி நன்றாக விளையாடவில்லை என்றால் மற்ற வீரர்கள் என்ன செய்தார்கள்?" என்று கேட்டிருக்கிறார் ரஷித் லடிஃப்.

இங்கிலாந்து அணிக்கெதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் அணிக்குத் திரும்பிய அவர், ஆரம்பத்தில் நன்றாகவே விளையாடினார். ஆனால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற ஒரு பந்தை அடிக்க ஆசைப்பட்டு 16 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். கோலியின் டெக்னிக்கில் தான் பிரச்சனை இருக்கிறது என்று கூறியிருக்கிறார் லடிஃப். பந்தை அடிப்பதற்கு அவர் எப்போதும் முன்னால் செல்வதால், பந்து ஷார்ட் லென்த்தில் பிட்ச் ஆனால் அவர் தடுமாறுகிறார் என்றும், தலையை பேலன்ஸ் செய்ய கோலி தடுமாறுகிறார் என்றும் கூறியிருக்கிறார் அவர்.

"யாராலும் விராட் கோலியை அணியில் இருந்து கழட்டிவிட முடியாது" -ஆவேசமான பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

"கோலியின் பிரச்சனை உளவியல் ரீதியானது அல்ல. இது டெக்னிக்கல் பிரச்சனை. தன்னுடைய இன்னிங்ஸை எப்படித் தொடங்கினார் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். ஒரு ஸ்டிரெய்ட் டிரைவ், ஒரு ஆன் டிரைவ், அதன்பிறகு ஒரு கவர் டிரைவ் என மிகச் சிறப்பாக தன் இன்னிங்ஸை அவர் தொடங்கினார். அந்தப் பந்துகளின் லென்த்தை கவனித்தால், அவை எல்லாமே ஃபுல் லென்த்தில் பிட்ச்சான பந்துகள். அந்த லென்த்தில் பிட்சாகும் பந்துகளை கோலி மிகவும் எளிதாக கையாள்கிறார். ஆனால் அவர் அவுட் ஆன பந்து சற்று ஷார்ட்டாக பிட்ச் ஆகி ஸ்விங் ஆனது.

அது கட் செய்யப்படவேண்ட பந்து. ஆனால் விராட் கோலி அந்த ஷாட் ஆடியதில்லை. அவர் எப்போதும் தன் எடையை ஃபிரன்ட் ஃபூட்டுக்கே கொடுக்கிறார். பந்து ஃபுல் லென்த்தில் பிட்சாகும் போது எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை. ஆனால், ஷார்டாக பிட்ச் ஆனால் அவர் தன்னுடைய பேலன்ஸை இழந்துவிடுகிறார். அவருடைய எடை முன் பக்கம் சென்றுவிடுவதால், ஷார்ட் பால்களுக்கு ஏற்றதுபோல் அவரால் மாற்றிக்கொள்ள முடியவததில்லை. பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இதை சரிசெய்யவேண்டும்" என்று கூறியிருக்கிறார் லடிஃப்.

banner

Related Stories

Related Stories