விளையாட்டு

IPL ஆடும்போது சர்வதேச போட்டியில் மட்டும் ஓய்வு எடுப்பது ஏன்.. சீனியர் வீரர்களை விமர்சித்த சுனில் கவாஸ்கர்

சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது மட்டும் எதற்காக ஓய்வு எடுக்கவேண்டும் என இந்திய வீரர்களை முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

IPL ஆடும்போது சர்வதேச போட்டியில் மட்டும் ஓய்வு எடுப்பது ஏன்.. சீனியர் வீரர்களை விமர்சித்த சுனில் கவாஸ்கர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் வீரர்கள், அதிலும் குறிப்பாக சீனியர்கள் சர்வதேச தொடர்களுக்கு ஓய்வு எடுப்பது பற்றி தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இந்த மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை விமர்சித்துத்தான் இப்படிக் கூறியிருக்கிறார் கவாஸ்கர்.

IPL ஆடும்போது சர்வதேச போட்டியில் மட்டும் ஓய்வு எடுப்பது ஏன்.. சீனியர் வீரர்களை விமர்சித்த சுனில் கவாஸ்கர்

இந்நிலையில் அந்த ஒருநாள் தொடருக்குப் பிறகு நடக்கவிருக்கும் ஐந்து சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்தும் ஓய்வு கொடுக்குமாறு விராட் கோலி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதுபற்றிப் பேசிய கவாஸ்கர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து ஓய்வு எடுக்க முடியாத வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"வீரர்கள் ஓய்வு எடுக்கும் இந்த வழக்கத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐபிஎல் தொடர் நடக்கும்போது நீங்கள் யாரும் ஓய்வு எடுக்கவில்லையே. அப்படி இருக்கும்போது இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது மட்டும் எதற்காக ஓய்வு எடுக்கவேண்டும்? இதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. இந்திய அணிக்காக நீங்கள் நிச்சயம் விளையாடியே தீரவேண்டும். ஓய்வு பற்றியெல்லாம் பேசவே கூடாது. டி20 போட்டிகள் வெறும் 20 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸ்கள் தானே. அது பெரிய அளவுக்கு உங்கள் உடல் உழப்பை வேண்டப்போவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போது வேண்டுமானாலும் உடலும் மனமும் சோர்ந்துவிடும். அது எனக்குப் புரியும். ஆனால் டி20 போட்டிகளில் அது பெரிய பிரச்சனை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் கவாஸ்கர்.

IPL ஆடும்போது சர்வதேச போட்டியில் மட்டும் ஓய்வு எடுப்பது ஏன்.. சீனியர் வீரர்களை விமர்சித்த சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் இப்போது மிகவும் சாதாரண விஷயமாக மாறிக்கொண்டிருக்கும் இந்த ஓய்வு வழக்கம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்த இந்திய ஜாம்பவான். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் குவித்திருக்கும் கவாஸ்கர், பிசிசிஐ இந்த விஷயத்தில் குறித்த நடவடிக்கை எடுத்து வீரர்கள் சரிசெய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒருவேளை, வீரர்கள் தாங்கள் விளையாடும் தொடர்களை முடிவு செய்துகொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும் என்றும் இல்லையெனில் அதற்கு ஏற்றது போல் அவர்களின் ஒப்பந்தம் மாற்றப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் கவாஸ்கர்.

IPL ஆடும்போது சர்வதேச போட்டியில் மட்டும் ஓய்வு எடுப்பது ஏன்.. சீனியர் வீரர்களை விமர்சித்த சுனில் கவாஸ்கர்

"இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விஷயத்தில் தலையிடவேண்டும் என்று நான் நினைக்கிறேன். கிரேட் ஏ-வில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மிகச் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு போட்டிக்கும் அவர்கள் ஊதியம் பெறுகிறார்கள். ஏதாவது ஒரு நிறுவினத்தின் சிஈஓ அல்லது மேனேஜிங் டைரக்டர் யாரேனும் ஒருவர் இவ்வளவு ஓய்வு பெறுகிறார்களா என்று சொல்லுங்கள். இந்திய கிரிக்கெட் இன்னும் சிறப்பாக ஒழுங்காக மாறவேண்டுமெனில், ஒரு கோடு வரையப்படவேண்டும். உங்களுக்கு ஓய்வு தேவைஇயெனில், ஊதியத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு விளையாடவேண்டாம் எனில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாட முடியாது என்று எப்படி நீங்கள் கூற முடியும். அதனால் தான் இந்த வழக்கத்துக்கு நான் உடன்படவில்லை" என்றும் கூறியிருக்கிறார் கவாஸ்கர்.

banner

Related Stories

Related Stories