விளையாட்டு

IPL 2022 தொடரின் சிறந்த வீரர் ராகுல் திரிபாதி.. பாராட்டிய முன்னாள் இந்திய அணியின் நட்சத்திரம்!

ஐ.பி.எல். 2022 தொடரின் சிறந்த வீரர் ராகுல் திரிபாதி என விரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

IPL 2022 தொடரின் சிறந்த வீரர் ராகுல் திரிபாதி.. பாராட்டிய முன்னாள் இந்திய அணியின் நட்சத்திரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வழக்கம்போல் பல நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது ஐ.பி.எல். முன்னணி சீனியர் வீரர்கள் முதல் இளம் உள்ளூர் வீரர்கள் வரை பலரும் ஐ.பி.எல் 2022 தொடரில் தங்கள் முத்திரையைப் பதித்திருக்கின்றனர். தன் அற்புதமான அதிரடியான பேட்டிங்கால் 800 ரன்களுக்கும் மேல் குவித்து ஆரஞ்ச் கேப் வென்றார். ஷிகர் தவான், கேஎல் ராகுல் போன்ற சீனியர்களும் இந்த சீசன் அதிக ரன் குவித்தனர். யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் இந்த ஐ.பி.எல் சீசனில் சிறப்பான கம்பேக்கை அரங்கேற்றினர். இந்த ஐபிஎல் தொடர் பல சீனியர் வீரர்கள் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு உதவி புரிந்திருக்கிறது.

சீனியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்றால், இளம் வீரர்களும் உள்ளூர் வீரர்களும் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ராகுல் திரிபாதியின் செயல்பாடு பலரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இந்திய முன்னாள் ஓப்பனர் விரேந்திர சேவாக், ராகுல் திரிபாதியின் இந்த சீசன் செயல்பாட்டை பாராட்டியிருக்கிறார். இந்த சீசனின் சிறந்த நம்பர் 3 பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி தான் என்று கூறியிருக்கிறார் சேவாக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பௌலர் உம்ரான் மாலிக், பஞ்சாப் கிங்ஸ் பௌலர் ஆர்ஷ்தீப் சிங் போல் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தன் சீரான ஆட்டத்தால் பலரின் பாராட்டுகளையும் திரிபாதி பெற்றிருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டார் சேவாக்.

IPL 2022 தொடரின் சிறந்த வீரர் ராகுல் திரிபாதி.. பாராட்டிய முன்னாள் இந்திய அணியின் நட்சத்திரம்!

“மூன்றாவது பேட்ஸ்மேனாக ராகுல் திரிபாதி மிகச் சிறப்பாக விளையாடினார். இந்த சீசனில் 400 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். இந்த சீசனில் சிறந்த நம்பர் 3 பேட்ஸ்மேன் அவர்தான். அனைத்து அணிகளையும் கவனித்துப் பார்த்தால், மூன்றாவது பேட்ஸ்மேனாக மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு வீரராக ராகுல் திரிபாதி தனித்துத் தெரிகிறார். அந்த பொசிஷனில் நிறைய ரன்கள் அடித்திருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியைப் பல போட்டிகளில் வெற்றி பெற வைத்திருக்கிறார். அந்த அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாகவும் விளங்கியிருக்கிறார்” என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் விரேந்திர சேவாக்.

கடந்த ஆண்டு வரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆடிவந்த ராகுல் திரிபாதியை, 2022 மெகா ஏலத்தில் 8.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவரான திரிபாதி, ஹைதராபாத் அணி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார். இந்த சீசனில் 3அரைசதஙள் உள்பட 413 ரன்கள் எடுத்தார் திரிபாதி. 39*, 17, 71, 34, 7* என அந்த அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வென்றபோது மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த நல்ல ஃபார்மின் காரணமாக விளங்கினார்.

banner

Related Stories

Related Stories