விளையாட்டு

IPL2022: ராஜஸ்தான் வெற்றிக்கு பட்லரின் சதம் மட்டுமே காரணமா? பெங்களூரு சறுக்கியது எங்கே? RR vs RCB

IPL2022: ராஜஸ்தான் வெற்றிக்கு பட்லரின் சதம் மட்டுமே காரணமா? பெங்களூரு சறுக்கியது எங்கே? RR vs RCB
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்று போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியிருக்கிறது. ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பாக ஆடியிருந்தது. குறிப்பாக, பட்லர் சதமடித்து அசத்தியிருந்தார். ஆனால், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பட்லர் அடித்த அந்த சதம் மட்டுமே காரணம் இல்லை. அவரை விட ஒருபடி அதிகமாகவே அந்த அணியின் பௌலர்கள் இந்த வெற்றிக்காக பங்காற்றியிருக்கின்றனர்.

போட்டி நடந்த அஹமதாபாத் மைதானத்தின் சராசரி ஸ்கோர் 175. ஆனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 157 ரன்களை மட்டுமே எடுத்திருக்கும். அதாவது, சராசரியை விடவும் 18 ரன்களை குறைவாகவே எடுத்திருக்கும். எலிமினேட்டர் சுற்றில் லக்னோவிற்கு எதிராக பெங்களூரு 207 ரன்களை அடித்திருந்தது. அவ்வளவு சிறப்பாக ஆடிய ஒரு அணியை சராசரி ஸ்கோரை கூட எடுக்கவிடாமல் தடுப்பது எவ்வளவு பெரிய காரியம்? ராஜஸ்தான் பௌலர்கள் இதை நேற்று சாதித்துக் காட்டியிருந்தனர்.

முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத்துக்கு எதிராக அவர்களை 188 ரன்களுக்குள் செய்ய முடியாமல் ராஜஸ்தான் தோற்றிருக்கும். ராஜஸ்தானின் பௌலர்கள் கடுமையாக சொதப்பியிருந்தனர். அந்த தோல்வியிலிருந்து மீண்டு சரியான கம்பேக்கை ராஜஸ்தான் பௌலர்கள் நேற்று கொடுத்திருந்தனர். தொடக்கத்திலிருந்தே ராஜஸ்தான் பௌலர் தங்களின் துல்லியமான திட்டமிட்ட தாக்குதலால் பெங்களூருவின் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைய வைக்க தொடங்கினர்.

போல்ட் வீசிய முதல் ஓவரில் இறங்கி வந்து ஸ்கொயரில் ஒரு மிரட்டலான சிக்சரை அடித்திருந்தாலும் பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரிலேயே கோலியின் விக்கெட்டை தூக்கிவிட்டனர். கோலி கடுமையாக திணறும் அவுட் சைடு தி ஆஃப் ஸ்டம்ப் லைனிலேயே பிரசித் கிருஷ்ணா வீசி கோலியை எட்ஜ் எடுத்திருப்பார். தொடக்கத்திலிருந்தே இரண்டு ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்திருந்தனர். இந்த அக்ரசிவ் அணுகுமுறை கடைசி வரைக்குமே தொடர்ந்தது. தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கில் இருக்க சஹால் 17 வது ஓவரை வீசும்போது அப்போதும் ஒரு ஸ்லிப்பை வைத்தே சாம்சன் அட்டாக் செய்திருப்பார். தினேஷ் கார்த்திக்கிற்கு இது மேலும் நெருக்கடியை கொடுத்தது.

மேக்ஸ்வெல் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கும்போது ட்ரெண்ட் போல்டின் கையில் சாம்சன் பந்தை கொடுத்திருப்பார். அதுவரை வட்டத்திற்குள் நின்ற ஃபைன் லெக்கை மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக்கிற்கு வந்த சமயத்தில் எல்லைக்கோட்டுக்கு அருகே சாம்சன் அனுப்பியிருப்பார். இப்போது போல்ட் பந்து வீச மூன்று டாட்களை ஆடிய மேக்ஸ்வெல் நான்காவதாக வீசப்பட்ட ஒரு ஷார்ட் பாலை அடித்தே ஆக வேண்டும் என்கிற மனநிலையில் எசகுபிசகாக அடித்து, அந்த ஃபைன் லெக் ஃபீல்டரிடமே கேட்ச் கொடுத்திருப்பார்.

IPL2022: ராஜஸ்தான் வெற்றிக்கு பட்லரின் சதம் மட்டுமே காரணமா? பெங்களூரு சறுக்கியது எங்கே? RR vs RCB

கடந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு 84 ரன்களை சேர்த்திருந்தது. இந்த போட்டியில் அதே அணி அதே டெத் ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. பௌலர்களுக்கும் கேப்டன் சாம்சனுக்கும் இடையிலான புரித்ந்ல் அவ்வளவு கச்சிதமாக இருந்தது. அதனால்தான், ராஜஸ்தானின் தீட்டியிருந்த திட்டங்களில் பெரும்பாலானவை வெற்றியை மட்டுமே கொடுத்தது.

மெக்காய், போல்ட், பிரசித் கிருஷ்ணா மூவரும் இணைந்து கடந்த போட்டியில் 11.3 ஓவர்களை வீசி 118 ரன்களை கொடுத்திருந்தனர். 2 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தனர். இந்த போட்டியில் அதே மூவர் 12 ஓவர்களை முழுமையாக வீசி 73 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இவர்கள் பெங்களூருவை 157 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதுதான் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கையே பிறந்தது. சராசரியை விட குறைவான ஸ்கோர் என்பதால்எந்த அழுத்தமுமின்றி துணிச்சலாக அட்டாக் செய்து ஆடலாம் என முடிவெடுத்தனர். விளைவு, 2008 க்கு பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

banner

Related Stories

Related Stories