விளையாட்டு

எது எனக்கு தோனியை பிடிக்காதா? - கம்பீர் கூறியது என்ன? - ஸ்போர்ட்ஸ் ரவுண்ட் அப்!

எது எனக்கு தோனியை பிடிக்காதா? - கம்பீர் கூறியது என்ன? - ஸ்போர்ட்ஸ் ரவுண்ட் அப்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1.பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இன்று நடந்த அரையிறுதி போட்டியில் ரபேல் நடால் அவரது சக நாட்டு வீரரான அல்கராஸ் கார்ஃபியாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நடால் 6-4, 4-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் அவர் அமெரிக்காவின் டி. பிரிட்ஸ்க்கு எதிராக விளையாட உள்ளார்.

2. பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.இறுதி போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த ஆசியா முகமது மற்றும் ஜப்பானை சேர்ந்த எனா ஷிபஹாரா ஜோடியை எதிர்த்து சீனாவை சேர்ந்த சூ யிஃபான் மற்றும் யாங் ஜாவோசூவான் ஜோடி விளையாடியது.முதல் செட்டில் சீன ஜோடி அதிரடியாக விளையாடி 7-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தியது. இரண்டாவது செட்டில் 7-6(4) என்ற செட் கணக்கில் சீன வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

3. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கவுதம் கம்பீர் ஓய்வை அறிவித்த பிறகு டோனிக்கும் கவுதம் கம்பீருக்கும் மோதல்கள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் பல நேரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இது குறித்து தற்போது கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார். " எனக்கு தோனியை பிடிக்கவில்லை என்று கூறுவது தவறானது. தோனி மீது எனக்கு பரஸ்பரமான மரியாதை இருக்கிறது. வாழ்க்கையில் எப்போதாவது தோனிக்கு உதவி தேவைப்பட்டால் அவருக்காக நான்தான் முதலில் நிற்பேன். ஏனெனில் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு மனிதராகவும் அவர் நிறைய செய்திருக்கிறார் " என தெரிவித்தார்.

4. பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில், ஐபிஎல்-ல் ‘பஞ்சாப் கிங்ஸ், அணி பட்டத்தை வெல்லும் திறமையான வீரர்களை கொண்ட அணியாக உருவெடுத்து இருப்பதாக நம்புகிறேன். இனி நெருக்கடிக்கு மத்தியில் வீரர்கள் தங்களது முழு திறமை, திட்டமிடலை சரியாக வெளிப்படுத்துவதை பொறுத்து எல்லாம் அமையும்’ என்று அந்த அணியின் புதிய கேப்டன் மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.

5. பூங்கோடு கிராமத்தில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியை காண ஏறத்தாழ 2ஆயிரம் பேர் திரண்டதாக கூறப்படுகிறது.பனமரக் கட்டைகளை கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி, அளவுக்கு அதிகமான பார்வையாளர்களை தாங்க முடியாமல் உடைந்து விழுந்தது. விபத்தில் 60 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கேலரி உடைந்த ஆத்திரத்தில் அங்கிருந்த கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

banner

Related Stories

Related Stories