விளையாட்டு

CSK vs KKR : ”அவர் எப்போ ரன் அடிக்கிறாருங்கறதுதான் முக்கியம்” - தோனி குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

சென்னை - கொல்கத்தா அணியிடையே 14வது ஐபிஎல் இறுதிப்போட்டி தொடங்கிய நிலையில் தோனி குறித்து நடிகர் சூர்யா பேசியது வைரலாகி வருகிறது.

CSK vs KKR : ”அவர் எப்போ ரன் அடிக்கிறாருங்கறதுதான் முக்கியம்” - தோனி குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

T20 ஐபிஎல் போட்டியின் 14வது சீசனுக்கான இறுதிப் போட்டி இன்று துபாய் மைதானத்தில் தொடங்கி இருக்கிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. இதனிடையே 9வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது சி.எஸ்.கே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் அந்த அணியின் கேப்டனான தோனியின் ஆட்டத்தை காணவும் ஆவலோடு இருக்கிறார்கள். ஏனெனில், டி20 போட்டிகளில் தோனிக்கு இது 300வது போட்டியாகும். 14 ரன்கள் அடித்தால் டி20 போட்டிகளில் 6000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் தோனி பெறுவார்.

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் பேசியுள்ள நடிகர் சூர்யா, அவர் 50 ரன் அடிக்கிறார். ஆனால், அதை எப்போ அடிக்கிறார் என்பதுதான் ரொம்ப முக்கியம் என தோனி குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

தொடர்ந்து அவர் ரன் அடிக்கிறத பார்த்து சின்ன குழந்தை அழுறது வைரல் ஆகுது. இதுக்காக பந்துல ஆட்டோகிராஃப் போட்டு அவரும் குடுக்குறது எல்லாம் வேற லெவல் என மகிழ்ச்சிப்பொங்க பேசியதோடு 24 படத்துக்காக அவர் அனுமதி கொடுத்தது எல்லாமே சந்தோஷமா இருந்துச்சு என்றார்.

banner

Related Stories

Related Stories