விளையாட்டு

IND vs ENG | சதம் அடிக்காவிட்டாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிய வாஷியின் 96 ரன்கள்!

ஃப்ரன்ட் ஃபூட்டை முன்னே ஒரு அழுத்து அழுத்தி அதன்பிறகு ஒரு ஸ்டெப் எடுத்து வைத்து ஷாட் ஆடும் இந்தத் தெளிவான அணுகுமுறைதான் வாஷியின் ஷாட்களை அவ்வளவு அழகாக மாற்றியிருந்தது.

IND vs ENG | சதம் அடிக்காவிட்டாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிய வாஷியின் 96 ரன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

நேற்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளையின் போது க்ரீம் ஸ்வானும் கவாஸ்கரும் 'ஒரு 10-20 ரன்கள் முன்னிலை என்பதை இங்கே வெற்றியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்' என பேசியிருந்தனர். ஆனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் முன்னிலை பெற்றது. கிரீம் ஸ்வான் மற்றும் கவாஸ்கரின் கூற்றுப்படி பார்த்தால் அங்கேயே இந்தியாவின் வெற்றி 100% உறுதியாகிவிட்டது. அந்த வெற்றியை உறுதி செய்து கொடுத்தவர் நம்மூர் பையன் வாஷி!

பன்ட் மற்றும் அக்ஷருடன் சேர்ந்து வாஷிங்டன் சுந்தர் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பி, வெற்றியையும் உறுதி செய்தது. பிரிஸ்பேனில் அறிமுக போட்டியில் அடித்த அரைசதம், சென்னையில் முதல் டெஸ்ட்டில் அடித்த அரைசதம் என இதற்கு முன்னர் இரண்டு மிக முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியிருந்த வாஷி இன்று ஆடியது மற்றுமொரு அட்டகாசமான இன்னிங்ஸ்.

வாஷியின் ஆட்டத்தில் எப்போதும் வயதிற்கு மீறிய ஒரு பக்குவம் இருக்கும். அது இந்த ஆட்டத்திலும் முழுமையாக வெளிப்பட்டிருந்தது. ரொம்பவே முதிர்ச்சியாக காணப்பட்டவர், கட்டுக்கோப்பான அணுகுமுறையை கையாண்டிருந்தார். ஒரு ஷாட்டை ஆட நினைத்தால் ஆடிவிடுகிறார். அதில் எந்த விதமான இரண்டாம் சிந்தனைக்கும் இடமே கொடுக்கவில்லை.

IND vs ENG | சதம் அடிக்காவிட்டாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிய வாஷியின் 96 ரன்கள்!

புஜாரவே இந்த போட்டியில் ஸ்பின்னை எதிர்கொள்வதில் கொஞ்சம் தடுமாறித்தான் போயிருந்தார். 'Front foot trigger மூவ்மென்ட்'டில் அரைகுறை மனதோடு செயல்பட்டிருந்தார். இதுகுறித்து வர்ணனையில் இருந்த கவாஸ்கர் விரிவாக பேசியிருந்தார். ஆனால், வாஷியின் ஆட்டத்தில் இப்படிப்பட்ட குறைகள் எதையும் பார்க்கவே முடியவில்லை. ஸ்பின்னுக்கு எதிராக வாஷியின் ட்ரிகர் மூவ்மென்ட் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் அழகாக இருந்தது. ஃப்ரன்ட் ஃபூட்டை முன்னே ஒரு அழுத்து அழுத்தி அதன்பிறகு ஒரு ஸ்டெப் எடுத்து வைத்து ஷாட் ஆடும் இந்தத் தெளிவான அணுகுமுறைதான் வாஷியின் ஷாட்களை அவ்வளவு அழகாக மாற்றியிருந்தது.

இந்த போட்டியிலும் லீச்சையும் ரூட்டையும் இப்படி அழகாக கவரில் ஷாட் ஆடியிருப்பார். பெஸ் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸரும் பௌண்டரியும் அடித்து அசத்தினார். ரன்களைவிட அவர் ஆடிய ஷாட்கள் அவ்வளவு அட்டகாசமாக இருந்தது. பௌலரின் தலைக்கு மேலே அழகாக சிக்ஸர் அடித்தவர், ஃபுல் லென்த் பந்தை ஃபுல் டாஸாக வாங்கி கவர் திசையில் பௌண்டரியாக்கினார். அந்த ஷாட்டில் அவர் காட்டிய ரிஸ்ட் மூவ்மென்ட் அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது.

பௌலர்களை, பந்துகளை சரியாகக் கணித்து, ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அடித்தார். மற்ற பந்துகளில் பெரிதாக எந்த ரிஸ்க்கையும் எடுக்காமல் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதையே முதன்மையாக கருதியிருந்தார். மனரீதியாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டை அவ்வளவு அழகாக புரிந்து வைத்திருக்கிறார். பௌலர்களின் சூழ்ச்சிகளுக்கு இரையாகிவிடாத திடமான மனநிலையைக் கொண்டிருக்கிறார்.

அணி சோர்வாக இருக்கும் போது விக்கெட்டே கிடைக்காத சமயங்களில் ஸ்டோக்ஸ் கொஞ்சம் பலே ஐடியாக்களோடு வந்து எதிரணி பேட்ஸ்மேனை கடுப்பாக்கி விக்கெட் வீழ்த்துவார். இன்றும் அக்ஷருடன் வாஷி சேர்ந்து விக்கெட் விடாமல் ஆடிக்கொண்டிருந்த போது திடீரென ஷார்ட் பால்களாக வீசிக்கொண்டே இருந்தார். ஒரு ஸ்பெல் முழுவதும் லெக் சைடில் டீப் மிட் விக்கெட், லாங் லெக், ஸ்கொயர் லெக் ஃபீல்டர்கள் வைத்து ஷார்ட் பால்களாக வீசினார். எப்படியாவது வாஷியை ஒரு பெரிய புல் ஷாட் ஆட வைத்துவிட வேண்டும் என்பதில் ஸ்டோக்ஸ் குறியாக இருந்தார். ஆனால், வாஷி கடைசி வரை இந்தத் திட்டத்திற்கு இரையாகவில்லை.

ஷார்த் பால்கள் என்பதால் அனைத்தையும் விட்டுவிடவில்லை. மார்பு உயருத்துக்கு மேலே வந்து பந்துகளை குனிந்து விட்டுவிட்டார். மார்பு உயரத்துக்கு வந்த பந்துகளை சரியாக பேலன்ஸ் செய்து லெக் சைடில் சிங்கிள்கள் தட்டினார். ஒவ்வொரு பந்தையும் சரியாகக் கணித்து விளையாடினார் வாஷிங்டன்.

இந்தியாவின் டாப் ஆர்டரில் வேகமாக விக்கெட் விழுந்ததற்கு ரன்கள் வராமக் இருந்ததும் ஒரு காரணம். ஆனால், வாஷி, பன்ட் மற்றும் அக்ஷர் இருவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்களை உயர்த்திக் கொண்டே இருந்தார். இதுவும் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. வாஷி சதம் அடிக்க முடியவில்லை என்பது அனைவருக்கும் வருத்தம்தான். ஆனால், அவர் இன்று அடித்திருக்கும் மேட்ச் வின்னிங் 96 ரன்கள், என்றைக்கும் போற்றுதலுக்குரிய ஒரு இன்னிங்ஸாகவே நினைவில் நிற்கும்.

banner

Related Stories

Related Stories