விளையாட்டு

“அகமதாபாத் பிட்சும் சேப்பாக்கம் பிட்ச் மாதிரியேதான்” : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா!

அகமதாபாத் பிட்சும் சேப்பாக்கம் பிட்ச் மாதிரியேதான் இருப்பது போல் தெரிகிறது. ஆனாலும் ஆட்டம் தொடங்கிய பிறகுதான் பிட்ச் பற்றி முழுமையாக மதிப்பிட முடியும் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

“அகமதாபாத் பிட்சும் சேப்பாக்கம் பிட்ச் மாதிரியேதான்” : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. சென்னையில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு 1-1 என இந்தத் தொடர் சமநிலையில் இருக்கும் நிலையில், அஹமதாபாத்தில் நடக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து தற்போது ரோஹித் ஷர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். கேப்டன்ஷிப் சர்ச்சை, சென்னை பிட்ச் மீதான விமர்சனம் என பல முக்கிய கேள்விகளுக்கும் ரோஹித் ஷர்மா பதிலளித்திருக்கிறார். ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றவுடன் ரோஹித் ஷர்மாவை இந்திய அணிக்குக் கேப்டனாக்க வேண்டும் என்கிற குரல்கள் வலுவாக எழுந்தது. அதன்பிறகு, ஆஸ்திரேலியாவில் ரஹானே சிறப்பாக செயல்பட்டவுடன் ‘ரஹானேவை கேப்டனாக்க வேண்டும், கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும்’ போன்ற விமர்சனங்கள் எழுந்தது.

இதையெல்லாம் முன்வைத்து “அஷ்வின், ரஹானே, கோலி மற்றும் நீங்கள் என எல்லோரும் பௌலர்களிடம் சென்று பேசுகிறீர்கள் அணிக்குள் தலைமைப்பண்பு மிக்க வீரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். நீங்கள் எப்படி ஒரு அணியாக செயல்படுகிறீர்கள்” என்ற கேள்விக்கு, “நாங்கள் எப்போதும் ஒரு அணியாகவே செயல்படுவோம். எங்களுக்கென்று தனித்தனி திட்டங்களை வைத்துக்கொள்வதில்லை. ஒரு வீரராக களத்தில் நிற்கும் போது ஆட்டத்தில் என்ன நடக்கிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பனவற்றைக் கவனித்துத் தெரிந்துக்கொண்டு பௌலர்களுக்கு சில ஆலோசனைகளை கொடுப்போம்.

“அகமதாபாத் பிட்சும் சேப்பாக்கம் பிட்ச் மாதிரியேதான்” : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா!

அதிகமாக நான் ஸ்லிப்பில்தான் ஃபீல்ட் செய்வேன். பேட்ஸ்மேனுக்குப் பின்னால் இருந்து கவனிப்பதால் எனக்கு தோன்றும் சில விஷயங்களை பௌலர்களோடு பகிர்ந்துக்கொள்வேன். சீனியர் வீரர்களின் இந்த செயல்பாடு இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கிறது. எங்களுடைய எண்ணங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்கிறோம். பல சமயங்களில் இந்திய அணி மோசமான நிலையிலிருந்து மீண்டு வந்ததற்கும் இந்த ஆலோசனைகள் காரணமாக இருந்திருக்கிறது” என்றார் ரோஹித்.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டுக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச் மீது கடுமையான விமர்சனங்களை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். இது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, “பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இவ்வளவு பெரிய விவாதங்கள் ஏன் எழுகின்றது எனத் தெரியவில்லை. நாங்களும் அதே பிட்ச்சில்தான் ஆடுகிறோம். எதிரணியும் அதே பிட்ச்சில்தான் ஆடுகிறார்கள். காலங்காலமாக இந்தியாவில் இதே போன்ற பிட்ச்கள்தான் பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு ஹோம் டீமின் அட்வாண்டேஜ் அதுதான்.

நாங்கள் வெளிநாடுகளுக்கு ஆட செல்லும் போது பிட்ச்சை பற்றி குறை சொல்வதில்லையே! மகிழ்ச்சியாக ஆடிவிட்டு வருகிறோம். எல்லாரும் அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இல்லையெனில், ஐ.சி.சி யிடம் எல்லா நாடுகளும் பொதுவான தன்மையுடைய பிட்ச்சை பயன்படுத்த வேண்டும் என கேட்கலாம். இரண்டு அணிகளும் ஒரே பிட்ச்சில் தான் ஆடுகின்றனர். அதனால் பிட்ச்சை குறை கூறுவதற்கு ஒன்றுமே இல்லை. ஆட்டத்தை பற்றி விவாதியுங்கள். வீரர்களின் பேட்டிங் பௌலிங் நுணுக்கங்கள் பற்றி விவாதியுங்கள். பிட்ச்சை பற்றி இவ்வளவு விமர்சனங்கள் தேவையில்லை” என்றார்.

“அகமதாபாத் பிட்சும் சேப்பாக்கம் பிட்ச் மாதிரியேதான்” : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா!

“பிங்க் பால் டெஸ்டில் நான் அதிகமாக ஆடியதில்லை. பங்களாதேஷ்க்கு எதிராக ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஆடியிருக்கிறேன். ஆனால், மற்ற வீரர்களிடம் பிங்க் பால் குறித்து அதிகம் பேசியிருக்கிறேன். மாலை 5 – 5.30 இந்த நேரத்தில்தான் நாம் கூடுதல் ஜாக்கிரதையாக பிங்க் பாலை எதிர்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அகமதாபாத் பிட்சும் சேப்பாக்கம் பிட்ச் மாதிரியேதான் இருப்பது போல் தெரிகிறது. ஆனாலும் ஆட்டம் தொடங்கிய பிறகுதான் பிட்ச் பற்றி முழுமையாக மதிப்பிட முடியும்” என்று கூறியிருக்கிறார் ரோஹித் ஷர்மா.

banner

Related Stories

Related Stories