விளையாட்டு

‘இப்பவே கப்பை தூக்கி கொடுத்துரலாம்’ - கோப்பை வெறியில் மும்பை.. அன்றே கணித்தது கலைஞர் செய்திகள்! IPL2020

இந்த சீசனின் எந்த போட்டியிலுமே ரஸல் ஒன்றும் செய்யவில்லை.பௌலிங்கில் மட்டும் சில நல்ல ஓவர்களை வீசினார், ஆனால் அணி அவரிடம் பேட்டிங்கைதான் முதன்மையாக எதிர்பார்க்கிறதே அன்றி பௌலிங்கை இல்லை.

‘இப்பவே கப்பை தூக்கி கொடுத்துரலாம்’ - கோப்பை வெறியில் மும்பை.. அன்றே கணித்தது கலைஞர் செய்திகள்! IPL2020
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

'சட்டு புட்டுனு... ஃபைனல வச்சு, கப்ப தூக்கி கையில கொடுங்கய்யா, நேரமாவுது!' என்கிற மனநிலையிலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி மீண்டும் ஒரு சௌகரியமான வெற்றியை பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். இயான் மோர்கன் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியே கொல்கத்தாவுக்கு சொதப்பலாக அமைந்திருக்கிறது.

கேப்டன்சியை துறக்கும் அளவுக்கு, இதுவரை டீகே அந்த அளவுக்கு மோசமான தோல்விகளை அணிக்கு பெற்றுத்தரவில்லை. பேட்டிங் ஆர்டர் விஷயத்தில் அந்த அணிக்கு தொடர் குழப்பங்கள் இருந்தாலும், கொல்கத்தாவின் பௌலிங் யுனிட்டை தனது கேப்டன்சியின் மூலம் அதன் தகுதிக்கு ஒரு படி அதிகமாகவே பெர்ஃபார்ம் செய்ய வைத்தார் டீகே.

கொஞ்சம் மங்கி கொண்டு வந்த நரைன், ரஸல் இருவரையும் வித்தியாசமாக பயன்படுத்தியது, வருண் சக்கரவர்த்தியை ஒரு ஸ்ட்ரைக் பௌலராக மாற்றியது, மவி-நாகர்கோட்டி என இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து எதிரணியை மிரடியது என, எல்லாமே அற்புதமான கேப்டன்சி. அந்த கேப்டன்சிக்கே இரண்டு போட்டிகளில் அந்த அணிக்கு வெற்றி கிடைத்திருந்தது.

‘இப்பவே கப்பை தூக்கி கொடுத்துரலாம்’ - கோப்பை வெறியில் மும்பை.. அன்றே கணித்தது கலைஞர் செய்திகள்! IPL2020

பேட்டிங்கை பொறுத்தவரைக்கும், CPL ன் முதல் லீக் போட்டிக்கு பிறகே KKR ரஸலை மட்டுமே இனியும் நம்பியிருந்தால் அந்த அணிக்கு பெரிய பிரச்சனைகள் உண்டாகும் என எழுதியிருந்தோம். ரஸல் மாதிரியான ஒரு ஹிட்டர் பின்னால் இருக்கிறார் என்ற சௌகரியத்தில் பேட்டிங் ஆர்டரில் இஷ்டத்துக்கு மாற்றங்கள் செய்தனர். ஆனால், இந்த சீசனின் எந்த போட்டியிலுமே ரஸல் ஒன்றும் செய்யவில்லை.

பௌலிங்கில் மட்டும் சில நல்ல ஓவர்களை வீசினார், ஆனால் அணி அவரிடம் பேட்டிங்கைதான் முதன்மையாக எதிர்பார்க்கிறதே அன்றி பௌலிங்கை இல்லை. ஓப்பனிங்கில் கொஞ்சம் அடித்து மொமண்டம் கொடுக்க நரைன் இருந்தார், அவரும் இந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பியதால், இவரை முழுமையாக நம்பலாம் என்றும் சொல்லுமளவுக்கு எந்த பெரிய ஹிட்டரும் இல்லை.

ஒன் டவுனில் இறங்கும் ராணாவால் அதிரடி காட்ட முடியும் என்றாலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போகிறேம் என கூறிய தினேஷ் கார்த்திக், நேற்றைய போட்டியிலேயே மிகவும் மோசமாக ஒரு ஷாட்டை ஆடி அவுட் ஆகி சென்றார். கடைசியில் கம்மின்ஸ் கொஞ்சம் அதிரடி காட்டியிருக்காவிடில் 148 என்ற ஸ்கோரையே எட்டியிருக்க முடியாது. பௌலிங்கில் வருண் சக்கரவர்த்தி அட்டகாசமாக வீசுகிறார். ஒரு லெக் ஸ்பின்னர் தனது ரிஸ்ட் மூலம் பெறும் சுழலை இவர் விரல் மூலமே கொண்டு வந்துவிடுகிறார்.

ஷிவம் மவியும் ஒரு லைன் & லெந்தை பிடித்துவிட்டால் அதில் தெளிவாக வீசுகிறார். கிறிஸ் க்ரீன் நேற்று பவர்ப்ளேயில் பவுண்ட்ரிகள் கொடுத்திருந்தாலும், அவர் பவர்ப்ளேயில் சிறப்பாக திட்டமிட்டு வீசக்கூடியவர் என்பதால் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுக்கலாம். மெக்கல்லம்-டீகே-மோர்கன் என நல்ல ஆளுமைகளை கொண்ட அணியாக இருந்தாலும் எல்லா வீரர்களும் தங்கள் ரோலை உணர்ந்து பெர்ஃபார்ம் செய்தால்தானே வெற்றிக்காக போராட முடியும்?

‘இப்பவே கப்பை தூக்கி கொடுத்துரலாம்’ - கோப்பை வெறியில் மும்பை.. அன்றே கணித்தது கலைஞர் செய்திகள்! IPL2020

இந்த விஷயத்தில்தான் மும்பை ஒரு சாம்பியன் அணியாக தனித்து நிற்கிறது. எந்த குழப்பமும் இல்லாமல் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் ரோலை உணர்ந்து ஆடுகின்றனர். 8 போட்டிகளில் மொத்தமே 13 வீரர்களைத்தான் அணிக்குள் பயன்படுத்தியிருக்கிறார் ரோஹித். முதல் இரண்டு ஆட்டங்களில் இஷன் கிஷன் உடல் தகுதியோடு வரும் வரை சவுரப் திவாரி, பிறகு நேற்றைய போட்டியில் ஒரு மாற்றத்திற்காக பேட்டின்சனுக்கு பதில் குல்டர் நைல். பேட்டின்சன்/ குல்டர் நைல் + போல்ட் பவர்ப்ளேயிலும், பும்ரா பவர்ப்ளேயில் ஒரு ஓவர், 10-12 ல் ஒரு ஓவர் பிறகு டெத் ஓவர், மிட் ஓவர்களில் ஸ்பின்னர்கள் என ஒரு டெம்ப்ளேட் ப்ளான் ரோஹித்துக்கு தெளிவாக இருக்கிறது.

ஒரு சில போட்டிகளில் மட்டும் எதிரணி வீரர்களின் பலத்தை பொறுத்து இந்த அட்டாக்கில் சில மாற்றங்களை செய்வார். உதாரணத்துக்கு, பஞ்சாப்புக்கு எதிரான போட்டி என்றால் பும்ராவுக்கு பவர்ப்ளேயில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும், கோலி பேட்டிங் என்றால் ராகுல் சஹாரை வைத்து கட்டம் கட்டுவார். பேட்டிங்கிலும் இப்படி எந்த குழப்பமும் இல்லாமல் ரோஹித், டீகாக், சூரியகுமார், இஷன் கிஷன், ஹர்திக், பொல்லார்ட் என இந்த பேட்டிங் ஆர்டர் எப்போதுமே மாறாது.

டாப் ஆர்டராலும் அடிக்க முடியும், பெரிய ஹிட்டர்களை நம்பி டாப் ஆர்டர் அடக்கி வாசிக்கவும் முடியும். எல்லாமே சரியாக நடக்கிறது. இப்படி எல்லாமே சரியாக அமைந்து தொடர் வெற்றிகளை பெற்று வரும் அணியின் கேப்டனிடம், 'When you have so many wins in a row, Do you worry about keeping everyone hungrier?' இப்படி ஒரு கேள்வியை கேட்க, ஹர்ஷா போக்ளேவை தவிர வேறு யாருக்கும் தோன்றாது.

நேற்றைய போட்டிக்கு பிறகு கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு 'மற்ற அணிகள் எப்படியெல்லாம் ஆட்டத்தை தவறவிடுகின்றன என்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கு போட்டி நடக்கும் அந்த நாள்தான் முக்கியம். 6 மாதமாக கிரிக்கெட் விளையாடாமல் அதீத பசியோடுதான் இருக்கிறோம். இன்னும் க்ரூனால், இஷன் கிஷனெல்லாம் முழுமையாக வாய்ப்பை பெறவில்லை. அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது இன்னும் அதிக பசியோடு விளையாடுவார்கள்' என ரோஹித் பதில் கூறியிருந்தார். They still have hunger to win! கோப்பையை வெல்வதை தவிர பல்தான்களின் பசியை வேறு எதுவும் போக்கிவிடாது.

banner

Related Stories

Related Stories