விளையாட்டு

கோலியை புகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் மேலும் பாராட்டிய இந்தியாவின் 2 இளம் வீரர்கள் - யார் அவர்கள்..?

இந்தியாவின் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்துள்ள ஸ்டீவ் ஸிமித் இன்னும் இரண்டு இளம் வீரர்களையும் புகழ்ந்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக அளவில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலைத் தயாரித்தால் அதில் முதல் இடத்துக்கு எப்போதும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருவரின் பெயரும் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தை உண்டாக்கும்.

அந்த அளவுக்கு இருவரும் மிகப்பெரிய சாதனைகளைச் சர்வதேச கிரிக்கெட்டில் செய்துள்ளனர். ஸ்மித் - கோலி இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவினாலும் அதே நேரத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்கத் தவறுவதில்லை.

உலககோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்திய ரசிகர்களை ஸ்டீவ் ஸ்மித்துக்கு கரகோஷம் எழுப்பச் சொல்லிக் கோலி வேண்டிக்கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்தும் கோலியின் மீது தனக்குள்ள மதிப்பை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ள ஸ்டீவ் ஸ்மித் அங்கிருந்து தன்னுடைய ரசிகர்களுக்காக ஒரு கலந்துரையாடல் நேரலை நிகழ்வை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடத்தினார்.

அதில் உலகின் சிறந்த ஒரு நாள் போட்டியின் பேட்ஸ்மேன் யார் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்குத் துளியும் யோசிக்காமல் விராட் கோலி என ஸ்மித் பதிலளித்துள்ளார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் விராட் கோலி மட்டுமே. அவர் இதுவரை 11,867 ரன்களை அடித்துள்ளார். அவருடைய பேட்டிங் ஆவரேஜ் 59.34 ஆக உள்ளது. மேலும் இதுவரை 43 சதங்களை அடித்துள்ள அவர், இன்னும் 7 சதங்கள் அடித்தால் சச்சினின் சாதனையை முறியடிப்பார்.

கோலிக்கு அடுத்தாக இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுலை தாக்குதல் தொடுக்கும் முக்கியமான வீரர் என ஸ்மித் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சஞ்சு சாம்சனையும் திறமை வாய்ந்தவர் என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories