விளையாட்டு

‘அற்புதமான ஷாட் நண்பா’ - பிரித்வி ஷாவை புகழும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்! #Video

பிரித்வி ஷாவின் பேட்டிங்கை பார்த்து கிரிக்கெட் உலகின் பேட்டிங் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் பாராட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

‘அற்புதமான ஷாட் நண்பா’ - பிரித்வி ஷாவை புகழும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்! #Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘டெல்லி கேபிட்டல்ஸ்’ அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும் இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமுமான பிரித்வி ஷாவின் பேட்டிங்கை பார்த்து ரிக்கி பாண்டிங் பாராட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்திய அணியின் அடுத்த தலைமுறை வீரர்களாக சுபம் கில், இஷன் கிஷான், பிரித்வி ஷா உள்ளிட்டோர் வளர்ந்து வருகின்றனர். இதில் பிரித்வி ஷாவின் பேட்டிங் திறமை எல்லோரையும் கவர்ந்து வருகிறது. 20 வயதே ஆகும் பிரித்வி ஷா ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பணியாற்றுகிறார். இந்நிலையில் அந்த அணியினர் துபாயில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேகப்பந்துவீச்சாளர்களை பிரித்வி ஷா எதிர்கொள்ளும் வீடியோ ஒன்று அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரித்வி ஷா பேட்டிங் செய்ய அதை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பார்வையிடுகிறார்.

வேகமாக வந்த பந்தை லாவகமாக முழு பந்தும் பேட்டில் படும் அளவுக்கு தூக்கி அடிக்கிறார் பிரித்வி ஷா. அதை பார்த்த ரிக்கி பாண்டிங் ”அற்புதமான ஷாட்” என புகழும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

சென்ற ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா 353 ரன்கள் எடுத்தார்.

சென்ற ஆண்டுதான் 7 வருடங்களுக்குப் பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி தகுதி பெற்றது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலிருந்து அந்த அணியின் முக்கிய வீரர்களான கிரிஸ் வோக்ஸ் மற்றும் ஜேஸன் ராய் உள்ளிட்டோர் வெளியேறியுள்ளதால் அந்த அணிக்கு அழுத்தம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories