விளையாட்டு

“2012-ல் தோனியின் கேப்டன் பதவியைக் காப்பாற்றினேன்” - ரகசியம் பகிர்ந்த பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன்

பிசிசிஐ முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாசன் தோனி குறித்தான தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

“2012-ல் தோனியின் கேப்டன் பதவியைக் காப்பாற்றினேன்” - ரகசியம் பகிர்ந்த பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மகேந்திர சிங் தோனியின் கேப்டன் பதவியை 2012-ம் ஆண்டு பிசிசிஐ குழு உறுப்பினர்களை எதிர்த்துக் காப்பாற்றியதாக முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து தோனிக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு நெருங்கியவர்கள் தோனியுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். அந்தவகையில் 2012-ம் ஆண்டு தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கலாம் என சில பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்தபோது, பிசிசிஐ தலைவர் என்ற முறையில் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி அதை நடக்கவிடாமல் பார்த்துக்கொண்டதாக ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித்தொடருக்கு முன்பு நடந்த அத்தேர்வுக்கான கூட்டத்தில் தோனியை நீக்கவேண்டும் என ஒரு தேர்வுக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள ஸ்ரீனிவாசன் “இது 2011-ம் ஆண்டு நடந்தது. இந்தியா உலகக்கோப்பையை வென்றிருந்தது. பின்பு ஆஸ்திரேலியாவில் நாம் சிறப்பாக டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. இதனால் ஒரு தேர்வுக்குழு உறுப்பினர் தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் டெஸ்டில் நன்றாக விளையாடவில்லை என்று ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பதவியிலிருந்து அவரை எப்படி நீக்கமுடியும்?” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த கேப்டன் யாரென்றுகூட யோசிக்காமல் இதைப் பற்றி அக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாக ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். பிசிசிஐ அமைப்பின் முந்தைய சட்டவிதிகளின்படி தேர்வுக்குழு எடுக்கும் முடிவு பிசிசிஐ தலைவர் ஒப்புதலுக்கு பிறகே அமல்படுத்தப்படும். ஆனால் புதிய விதிகளின்படி தேர்வுக்குழுவின் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories