விளையாட்டு

‘தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்ஸிக்கு ஓய்வு அளிக்கவேண்டும்’ - பிசிசிஐ-க்கு வலுக்கும் கோரிக்கை!

முன்னாள் இந்திய கேப்டன் எம் எஸ் தோனி 7-ம் எண் ஜெர்ஸியை அணிந்திருந்தார். பல காலமாக அந்த ஜெர்ஸியை தோனியுடன் இணைத்தே ரசிகர்கள் பார்த்து வந்தனர்.

‘தோனி  அணிந்த 7-ம் எண் ஜெர்ஸிக்கு ஓய்வு அளிக்கவேண்டும்’ - பிசிசிஐ-க்கு வலுக்கும் கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எம் எஸ் தோனி ஓய்வு பெற்றதையடுத்து அவர் அணிந்திருந்த 7-ம் எண் ஜெர்ஸிக்கு ஓய்வு அளிக்க வேண்டும் எனவும் அதை இன்னொரு வீரர் அணிந்திருப்பதைப் பார்க்க முடியாது எனவும் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ட்விட்டரில் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு உலக கோப்பை ஒரு சாம்பியன்ஸ் ட்ராஃபி என அனைத்து மகுடங்களையும் சூட்டி அழகு பார்த்த முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனால் அவருடைய ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் உருக்கமான பல செய்திகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் தோனிக்குள்ள 70 லட்ச ஃபாலோவர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் தோனி பயன்படுத்தி வந்த 7-ம் எண் ஜெர்ஸிக்கு ஓய்வு அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் எழுதியுள்ள தினேஷ் கார்த்திக் “வெள்ளை பந்து கிரிக்கெட்டில் 7-ம் எண் ஜெர்ஸிக்கு பிசிசிஐ ஓய்வு அளிக்கும் என நம்புகிறேன். உங்களுடைய இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு வாழ்த்துகள். எங்களுக்கு அதிலும் நிறைய ஆச்சரியங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல் முன்னாள் இந்திய வீரர் முகமது கெய்ஃபும் “இன்னொருவர் மீண்டும் 7-ம் எண் ஜெர்ஸியை அணிந்திருப்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

கால்பந்தை போல் கிரிக்கெட்டில் ஜெர்ஸி எண்களுக்கு அதிகாரப்பூர்வ ஓய்வு அளிக்கப்படுவதில்லை. ஆனால் சச்சின் அணிந்திருந்த 10-ம் எண் ஜெர்ஸியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பால் ஓய்வு அளித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories