விளையாட்டு

13வது IPL சீசன் நடைபெறுமா? நடைபெறாதா? - பி.சி.சி.ஐ புதிய முடிவு - ஏ.என்.ஐ தகவல்! #CoronaCurfew

டி20 உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

13வது IPL சீசன் நடைபெறுமா? நடைபெறாதா? - பி.சி.சி.ஐ புதிய முடிவு - ஏ.என்.ஐ தகவல்! #CoronaCurfew
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள்,சினிமா படப்பிடிப்புகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றது.

இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

13வது IPL சீசன் நடைபெறுமா? நடைபெறாதா? - பி.சி.சி.ஐ புதிய முடிவு - ஏ.என்.ஐ தகவல்! #CoronaCurfew

கோடை காலத்தில் ஐ.பி.எல், திரைப்பட வெளியீடுகள் என மக்களுக்கான ஏகப்பட்ட பொழுதுபோக்கு திட்டங்கள் தத்தம் துறையில் இருந்தன. இவை அனைத்தும் கொரோனாவால் தவிடுபொடியானதால், ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு ஐ.பி.எல் போன்ற போட்டிகளின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

தற்போது மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மே 3ம் தேதிக்குப் பிறகாவது ஐபிஎல் குறித்த அறிவிப்புகள் வருமா என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,13-வது ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பி.சி.சி.ஐ முடிவெடுத்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது டி20 உலகக்கோப்பை போட்டியும் ஒத்திவைக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories