விளையாட்டு

மனைவி விளையாடுவதை காண 10,000 கி.மீ பயணித்து வந்த ஸ்டார்க்.. வெற்றியை பரிசளித்த ஹிலி.. T20WC நெகிழ்ச்சி!

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், மனைவியின் ஆட்டத்தை காண ஆஸ்திரேலிய வீரர் மிட்ஷல் ஸ்டார்க் 10000 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்து போட்டியை கண்டு ரசித்து உற்சாகப்படுத்தினார். 

மனைவி விளையாடுவதை காண 10,000 கி.மீ பயணித்து வந்த ஸ்டார்க்.. வெற்றியை பரிசளித்த ஹிலி.. T20WC நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் T20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று விளையாடின. இதில், 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்ட ஆஸி., வீராங்கனையும் மனைவியுமான ஆலிசா ஹிலி ஆட்டத்தை காண ஆஸ்திரேலிய ஆண்கள் அணி வீரர் மிட்ஷல் ஸ்டார்க் வருகை தந்திருந்தார்.

மனைவி விளையாடுவதை காண 10,000 கி.மீ பயணித்து வந்த ஸ்டார்க்.. வெற்றியை பரிசளித்த ஹிலி.. T20WC நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா ஆண்கள் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில், நேற்றைய தினம் இரு அணிகளிடையே 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா சார்பாக மிட்ஷல் ஸ்டார்க் விளையாடவில்லை.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மனைவியின் ஆட்டத்தை கண்டு ரசித்து உற்சாகப்படுத்த, தென்னாப்ரிக்காவுடனான 3வது போட்டியில் விளையாடாமல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா புறப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்து சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து மெல்போர்ன் வந்தடைந்த ஸ்டார்க், தனது மனைவி Healy ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தார்.

மனைவியின் போட்டியை காண, தனது போட்டியை ரத்து செய்துவிட்டு பல ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்டார்க் பயணம் செய்து ஊக்கமளித்த நிகழ்வு சமூக வலைதளங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், தனது கணவரின் ஆச்சர்யப் பரிசுக்கு ஹிலியும் ஏமாற்றம் கொடுக்காமல் வெற்றியை பரிசாக அளித்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories