விளையாட்டு

INDvsSA ODI: மீண்டும் அணிக்கு திரும்பிய ஹர்திக், தவான் - கேள்விக்குறியாகும் கேதார் ஜாதவின் நிலை?

தென்னாப்பிரிக்க அணியுடனான 3 ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளனர்.

INDvsSA ODI: மீண்டும் அணிக்கு திரும்பிய ஹர்திக், தவான் - கேள்விக்குறியாகும் கேதார் ஜாதவின் நிலை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னாப்பிரிக்க அணியுடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 12ஆம் தேதி தர்மசாலாவிலும், 2வது போட்டி 15ஆம் தேதி லக்னோவிலும், 3வது போட்டி 18ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. இந்த 3 ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

புதிதாக பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள சுனில் ஜோஷி தலைமையிலான அணி தென்னாப்ரிக்க தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்தது. அதில், 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் தலைமையில், ப்ரித்வி ஷா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், பும்ரா, நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர். மேலும், காயத்திலிருந்து குணமடைந்த ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டியில் விளையாடிய பாண்டியா முதுகு வலி அறுவை சிகிச்சை செய்து சுமார் 5 மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். உள்ளூர் டி20 தொடர்களில் சிறப்பாக ஆடி கவனத்தை ஈர்த்த பாண்டியா, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது ஃபிட்னஸை நிரூபித்ததன் அடிப்படையில், அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

இதேபோல், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோள்பட்டையில் காயமடைந்த ஷிகர் தவானும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

INDvsSA ODI: மீண்டும் அணிக்கு திரும்பிய ஹர்திக், தவான் - கேள்விக்குறியாகும் கேதார் ஜாதவின் நிலை?

தொடக்க வீரரான ரோஹித் சர்மா, கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்துடனான 5வது டி20 போட்டியில் தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். அதிலிருந்து ரோஹித் மீளாததால், தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல, கேதர் ஜாதவ், ஷர்துல் தாகூர், ஷிவம் தூபே, முகமது ஷமி ஆகிய நால்வர் இந்த முறை அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரை 0க்கு3 என தவறவிட்ட இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் வெல்லும் முனைப்பில் உள்ளது.

banner

Related Stories

Related Stories