விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகும் தமிழர்!

இந்திய தேர்வுக் குழுவினரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதை அடுத்து புதிய தேர்வுக் குழுவை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். இவரது தலைமையிலான குழுதான் இந்திய வீரர்களை தேர்வு செய்கிறது. தேவங்காந்தி, ககன் கோடா, ஜதின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகிய 4 பேர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. தேர்வுக்குழுவில் உள்ள யாருக்கும் சர்வதேச அளவில் அனுபவம் இல்லை எனவும், விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரியின் கைப்பாவையாக செயல்படுகின்றனர் என இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகும் தமிழர்!

இந்நிலையில், தற்போதைய இந்திய தேர்வுக் குழுவினரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. தற்போதுள்ள தேர்வுக் குழுவையே நீட்டிக்க வாய்ப்புகள் இருந்தாலும் பிசிசிஐ தலைவர் கங்குலி அதனை மாற்ற விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே, புதிய தேர்வுக் குழுவை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்க உள்ளது.

புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் சுழற்பந்து வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டி மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், இவர் தற்போது சர்வதேச போட்டிகளுக்கு கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகும் தமிழர்!

பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் போது புதிய தேர்வுக்குழு தலைவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுவே தற்போதைய தேர்வுக்குழுவுக்கு கடைசியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories