விளையாட்டு

ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசப்படங்கள் : ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வாட்சன்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசப்படங்கள் : ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வாட்சன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் முட்டியில் ரத்தம் வழிய விளையாடி ரசிகர்களின் அன்பை பெற்றார்.

ஷேன் வாட்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசப்படங்கள் : ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வாட்சன்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்சனின் ‘டுவிட்டர்’ கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அவரது கணக்கை முடக்கிய சில மணி நேரத்திலேயே அது மீட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது ‘இன்ஸ்டாகிராம்’ கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

அதோடு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பல ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டு இருந்தன. ஹேக்கர்களின் இந்த செயலால் வாட்சன் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், இதுகுறித்து ரசிகர்களிடம் ஷேன் வாட்சன் விளக்கமும் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட சட்டவிரோத புகைப்படங்களுக்காக அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட போது, ட்விட்டர் தளம் அதை மிக விரைவாக மீட்க உதவியது. ஆனால், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்க முடியவில்லை.

இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது இன்ஸ்டாகிராம் மிக விரைவாக உதவ வேண்டும். ஆனால் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories