விளையாட்டு

IND vs SA : அஸ்வின் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகிய தென் ஆப்ரிக்க அணி - 275 ரன்களுக்கு ஆல் அவுட்!

IND vs SA : அஸ்வின் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகிய தென் ஆப்ரிக்க அணி - 275 ரன்களுக்கு ஆல் அவுட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

IND vs SA : அஸ்வின் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகிய தென் ஆப்ரிக்க அணி - 275 ரன்களுக்கு ஆல் அவுட்!

ப்ருவன், டெம்பா பவூமா, அன்ரிக் நொர்டியா ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டீகாக்கும், டுப்ளஸிஸும் நிதானமாக விளையாடினர். இவர்கள் இருவரையும் அஸ்வின் ஆட்டமிழக்க செய்தார். பின்னர் வந்த செனுரான் முத்துசாமி ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த மஹராஜ், பிலாண்டர் இருவரும் இந்திய அணியின் பவுலர்களுக்கு ஆட்டம் காட்டினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. அரைசதம் கடந்த மஹாராஜ் அஸ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார்.

IND vs SA : அஸ்வின் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகிய தென் ஆப்ரிக்க அணி - 275 ரன்களுக்கு ஆல் அவுட்!

அதைத்தொடர்ந்து வந்த தொடர்ந்து வந்த ரபாடா, அஸ்வினின் பந்தில் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் ஷமி 2 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்திய அணி, 326 ரன்கள் என்ற மெகா முன்னிலை பெற்றுள்ளது.முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கியதால் இந்திய அணி ஃபாலோ ஆனை அமல்படுத்துமா அல்லது பேட்டிங் செய்யுமா என்பது நாளை தான் தெரிய வரும்.

banner

Related Stories

Related Stories