விளையாட்டு

டெஸ்ட் அரங்கில் 7வது இரட்டை சதத்தை பதிவுசெய்த ‘கிங்’ கோலி - இன்று முறியடித்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் விளாசினார்.

டெஸ்ட் அரங்கில் 7வது இரட்டை சதத்தை பதிவுசெய்த ‘கிங்’ கோலி - இன்று முறியடித்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஏழாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் 7வது இரட்டை சதத்தை பதிவுசெய்த ‘கிங்’ கோலி - இன்று முறியடித்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக முறை இரட்டை சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர்களான இலங்கையின் மகிளா ஜெயவர்தனே (7 முறை), இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் (7 முறை) ஆகியோரின் சாதனையைச் சமன் செய்தார் கோலி.

சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக முறை இரட்டை சதம் விளாசிய வீரர்கள் :

  • டான் பிராட்மேன் - 12
  • குமார் சங்ககரா - 11
  • பிரையன் லாரா - 9
  • விராட் கோலி - 7
  • மகிளா ஜெயவர்தனே - 7
  • வாலி ஹேமண்ட் - 7
  • சச்சின் டெண்டுல்கர் - 6
  • விரேந்தர் சேவாக் - 6
  • ரிக்கி பாண்டிங் - 6
டெஸ்ட் அரங்கில் 7வது இரட்டை சதத்தை பதிவுசெய்த ‘கிங்’ கோலி - இன்று முறியடித்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

இந்திய வீரர்களில் அதிக இரட்டை சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் தற்போது கோலி 7 இரட்டை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்களில் அதிக இரட்டை சதம் :

  • விராட் கோலி 7
  • சச்சின் மற்றும் சேவாக் 6
  • டிராவிட் 5

இப்போட்டியில் கோலி 150 ரன்களைக் கடந்த போது, கேப்டனாக 150 ரன்களுக்கு மேல் அதிக முறை எடுத்திருந்த டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார்.

  • விராட் கோலி - 9
  • டான் பிராட்மேன் - 8

மேலும், இப்போட்டியில் கோலி 200 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7,000 ரன்களை கடந்து அசத்தினார்.

banner

Related Stories

Related Stories