விளையாட்டு

முதல் போட்டியை நினைவுகூர்ந்த யுவராஜ் சிங்...19 Years of Yuvraj !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தனது முதல் போட்டி குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

முதல் போட்டியை நினைவுகூர்ந்த யுவராஜ் சிங்...19 Years of Yuvraj !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2011, 2007 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு இவர் முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

முதல் போட்டியை நினைவுகூர்ந்த யுவராஜ் சிங்...19 Years of Yuvraj !

யுவராஜ் சிங் கிரிக்கெட் உலகில் அறிமுகமாகி இன்றுடன் 19 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் கோப்பை தொடரில் கென்யாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ராகுல் டிராவிட், விஜய் தஹியா ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படத்தை யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார். அதில், “முதன்முறையாக நான் இந்திய அணிக்காக விளையாட தேர்வானபோது எடுக்கப்பட்ட புகைப்படம்” எனத் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் இந்தியா அணிக்காக 304 ஒருநாள் போட்டியில் களமிறங்கி 8,701 ரன்களை குவித்துள்ளார். இதில் 14 சதங்களும் 42 அரைசதங்களுக்கும் அடங்கும். ஓய்வு பெற்றாலும் வெளிநாட்டில் நடைபெறும் T20 தொடரில் விளையாடி வருகிறார்.

banner

Related Stories

Related Stories