விளையாட்டு

தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்கு தெரியும் - ஷிகர் தவான்

தோனியின் ஓய்வு முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்கு தெரியும் - ஷிகர் தவான்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

அவரின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுவரை தோனி தரப்பில் ஓய்வு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இந்நிலையில், தோனியின் ஓய்வு முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் தெரிவித்துள்ளார்.

தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்கு தெரியும் - ஷிகர் தவான்

ஷிகர் தவான் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “தோனியின் தலைமையில் தான் நான் இந்திய அணிக்கு அறிமுகமானேன். வ்வொரு வீரரின் பலம், பலவீனம் எது தோனிக்கு நன்கு தெரியும். அவரின் எதிர்காலம் குறித்து தோனி சரியான நேரத்தில் முடிவு எடுப்பார்.

தோனி நீண்ட காலமாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார், அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்கு தெரியும். இது அவருடைய முடிவாக இருக்க வேண்டும். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணிக்காக இன்றியமையாத தருணங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார்.

நேரம் வரும்போது அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று நான் நம்புகிறேன். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் தோனி. நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம், அதிகமான மரியாதையும் வைத்துள்ளோம்” என தவான் கூறினார்.

banner

Related Stories

Related Stories