விளையாட்டு

விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - தடையிலிருந்து மீண்டு வந்து சாதனை!

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்.

விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - தடையிலிருந்து மீண்டு வந்து சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி)டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி கேப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் இருந்த விராட் கோலி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் கோல்டன் டக்கிற்க்கு அவுட்டானதால் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - தடையிலிருந்து மீண்டு வந்து சாதனை!

கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் புஜாரா 825 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். அதேபோல, மற்றொரு இந்திய வீரரான ரஹானே 725 புள்ளிகள் பெற்று 4 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் ஒரு சதம், இரண்டு அரைசதம் என் மொத்தம் 289 ரன்கள் குவித்த ஹனுமா விஹாரி 40 இடங்கள் முன்னேறி 30-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் முதல் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார் ஸ்மித். பின்னர் கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - தடையிலிருந்து மீண்டு வந்து சாதனை!

ஸ்மித் விளையாடாத நேரத்தில் விராட் கோலி தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். தடை முடிந்து ஆஷஸ் தொடரில் களமிறங்கிய ஸ்மித் மூன்று சதம், ஒரு அரைசதம் அடித்து கலக்கினார். பின்னர் ஆர்ச்சர் வீசிய பந்தில் காயமடைந்து அடுத்த போட்டியில் களமிறங்கவில்லை. இந்நிலையில் 4வது போட்டியில் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.

இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் விளையாடுகிறது. அந்த தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் மீண்டும் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதுவரை ஸ்டீவ் ஸ்மித் தான் முதலிடத்தில் நீடிப்பார்.

banner

Related Stories

Related Stories