விளையாட்டு

INDvsWI : தொடர்ந்து சொதப்பி வரும் பண்ட்-க்கு பதிலாக சஹா அணியில் சேர்க்கப்படுவாரா?

கிங்ஸ்டனில் இன்று நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.

INDvsWI : தொடர்ந்து சொதப்பி வரும் பண்ட்-க்கு பதிலாக சஹா அணியில் சேர்க்கப்படுவாரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் T 20 தொடர்களைக் கைப்பற்றிய நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. எனவே பண்ட்க்கு பதில் சஹா களமிறங்க வேண்டும் என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என கோரிக்கை வைத்தனர்.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் அந்தக் கூட்டணியை மாற்ற கோலி விரும்பமாட்டார் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், பண்டிற்கு பதில் காயத்திலிருந்து மீண்டுவந்த சஹா களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரில் யாரேனும் ஒருவர் நீக்கப்பட்டு ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மயங்க் அகர்வால் முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இவரை நீக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பந்துவீச்சைப் பொறுத்தவரை முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் மிரட்டலான பார்மில் உள்ளதால் உமேஷ் யாதவிற்கு வாய்ப்புக் கிடைப்பது சந்தேகமே. அதேபோல சுழற்பந்துவீச்சாளரான ஜடேஜா முதல் இன்னிங்ஸில் அடித்த அரைசதம் அணியை இக்கட்டான நேரத்தில் காப்பாற்றியது. அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

உத்தேச இந்திய அணி :

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால்/ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரஹானே, விஹாரி, பண்ட்/சஹா, ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது சமி, பும்ரா.

இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

banner

Related Stories

Related Stories