விளையாட்டு

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : அதிரடியாக முன்னேறிய பும்ரா, தொடர்ந்து முதலிடத்தில் கிங் கோலி!

ஐ.சி.சி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கிங் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : அதிரடியாக முன்னேறிய பும்ரா, தொடர்ந்து முதலிடத்தில் கிங் கோலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் முறையாக பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : அதிரடியாக முன்னேறிய பும்ரா, தொடர்ந்து முதலிடத்தில் கிங் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 910 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் உள்ளார். 3வது இடத்தில் கேன் வில்லியம்ஸன், 4வது இடத்தில் சத்தீஸ்வர் புஜாரா ஆகியோர் உள்ளனர்.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : அதிரடியாக முன்னேறிய பும்ரா, தொடர்ந்து முதலிடத்தில் கிங் கோலி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 81 மற்றும் 102 ரன்கள் விளாசிய இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே 21வது இடத்தில் இருந்த ரஹானே பத்து இடங்கள் முன்னேறி 11வது இடத்திற்கு வந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories