விளையாட்டு

அனுஷ்கா தான் என் வாழ்வின் மிகப்பெரிய வரம் - மனைவியைக் கொண்டாடும் இந்திய கேப்டன் கோலி !

தனது மனைவி அனுஷ்கா சர்மாதான் தன்னை சரியான பாதையில் வழிநடத்துவதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் காதலித்து வந்த போதிலிருந்தே கோலி விளையாடும் ஆட்டங்களுக்கு நேரில் ஆஜராகி கோலியை உற்சாகப்படுத்துவார். இந்த ஜோடி இந்திய அளவில் மிகப் பிரபலம்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, ''அனுஷ்கா சர்மா என் வாழ்வின் பொக்கிஷம். அனுஷ்கா சர்மா எனக்கு கிடைத்தது என் வாழ்வில் மிகப்பெரிய வரம். என்னை சரியான பாதையில் வழிநடத்தி செல்வதே அவர்தான்.அவரிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. விரைவில் கற்றுக்கொள்வேன்.

நான் ஒரு சரியான துணையை தேர்வு செய்துள்ளேன். ஏனெனில் அவர் தனது தொழிலை செய்கிறார். அதோடு, எனக்கான இடத்தையும் முழுவதுமாக புரிந்து வைத்துள்ளார் '' என்று தெரிவித்துள்ளார்.

தனது துணையை புகழ்ந்து பேசிய கோலியை சமூக வலைத்தளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories