விளையாட்டு

“சச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது” என்று சொன்ன சேவாக் : அப்படி என்ன சாதனை அது?

சச்சினின் பல சாதனைகளை விராட் கோலி தகர்த்து வந்தாலும் ஒரே ஒரு சாதனையை மட்டும் அவரால் முறியடிக்கவே முடியாது எனத் தெரிவித்துள்ளார் சேவாக்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை விராட் கோலி தகர்த்து வந்தாலும் ஒரே ஒரு சாதனையை மட்டும் அவரால் முறியடிக்கவே முடியாது எனத் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் கோலி, பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை முறியடிக்கக்கூடிய வாய்ப்பு தற்போதைய வீரர்களில் விராட் கோலிக்குத்தான் பிரகாசமாக இருக்கிறது.

ஒரு நாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய இரண்டு வகையான ஆட்டங்களிலும் நம்பர் 1 வீரராகத் திகழும் கோலி, சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாகத் தகர்த்து வருகிறார்.

ஒரு நாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களை (463 போட்டிகள்) விளாசி உலகிலேயே அதிக சதங்களை எடுத்த வீரராகத் திகழ்கிறார். அந்தச் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 7 சதங்களே தேவைப்படுகிறது. கோலி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்களை விளாசியிருக்கிறார்.

“சச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது” என்று சொன்ன சேவாக் : அப்படி என்ன சாதனை அது?

இந்நிலையில் ஒரு பேட்டியில், கோலி - ஸ்மித் ஆகியோர் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் எனத் தெரிவித்ததோடு, கோலியின் கரியர் முடிவடைவதற்குள் சச்சினின் பெரும்பாலான சாதனைகளை முறியடித்துவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், சச்சினின் எத்தனை சாதனைகளைத் தகர்த்தெறிந்தாலும், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சினின் சாதனைகளை இனி எந்த வீரராலும் முறியடிக்க முடியாது எனப் பெருமையோடு தெரிவித்துள்ளார் சேவாக்.

“சச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது” என்று சொன்ன சேவாக் : அப்படி என்ன சாதனை அது?

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உலகிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் உச்சத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். விராட் கோலி இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories