விளையாட்டு

இந்தியப் பெண்ணைக் கரம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி : சானியா மிர்ஸா வாழ்த்து !

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி, இந்தியாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்தியப் பெண்ணைக் கரம் பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி : சானியா மிர்ஸா வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. 25 வயதான இவர் இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த ஷமியா அர்ஜூ (வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நேற்று துபாயில் நடைபெற்றது.

மணக்கோலத்தில் ஹசன் அலி- ஷமியா. 
மணக்கோலத்தில் ஹசன் அலி- ஷமியா. 

ஷமியா எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். ஷமியாவின் குடும்பம் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகிறார்கள்.

திருமண விழாவில் கலந்து கொள்ள இந்திய வீரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஹசன் அலி. ஆனால், இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் திருமண நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹசன் அலி, “இந்திய வீரர்கள் கலந்து கொண்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.

இந்திய பெண்ணை கரம் பிடித்த ஹசன் அலிக்கு, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories