விளையாட்டு

சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை வெறும் 66ல் முறியடித்த டிம் சவுத்தி .. அப்படி என்ன சாதனை ?

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை 66 டெஸ்டில் சமன் செய்துள்ளார் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சவுத்தி.

சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை வெறும் 66ல் முறியடித்த டிம் சவுத்தி .. அப்படி என்ன சாதனை ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சச்சின் டெண்டுல்கர் 329 இன்னிங்ஸில் செய்த சாதனையை வெறும் 89 இன்னிங்ஸில் சமன் செய்துள்ளார் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சவுத்தி.

இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 267 ரன்கள் எடுத்தது. தற்போது, நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களுடன் ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி, ஒரு சிக்சர் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் எனக் கொண்டாடப்படும் சச்சின், 200 டெஸ்டில் பங்கேற்று மொத்தமாக 69 சிக்சர்கள் அடித்துள்ளார். நியூசிலாந்தின் டிம் சவுத்தி, வெறும் 66 டெஸ்ட் போட்டிகளில் 69 சிக்சர்கள் விளாசி சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை வெறும் 66ல் முறியடித்த டிம் சவுத்தி .. அப்படி என்ன சாதனை ?

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தி, பின் வரிசை வீரராகக் களமிறங்கினாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று வரும் தொடரில் இன்னொரு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் சச்சினின் டெஸ்ட் சிக்ஸர்களை முந்துவார் டிம் சவுத்தி.

டெஸ்ட் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம் 107 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இடங்களில், கில்கிறிஸ்ட் (100 சிக்சர்கள்), கெயில் (98 சிக்சர்கள்), காலிஸ் (97 சிக்சர்கள்), சேவாக் (91 சிக்சர்கள்) ஆகியோர் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories