விளையாட்டு

INDVSWI : ரன் மெஷின் விராட் கோலி படைக்க இருக்கும் 3 முக்கிய சாதனைகள்!

இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ரன் குவிக்கும் எந்திரமான விராட் கோலி பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது.

INDVSWI : ரன் மெஷின் விராட் கோலி படைக்க இருக்கும் 3 முக்கிய சாதனைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் T20 தொடரின் 3 போட்டிகளையும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு கயானாவில் உள்ள ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகள் புரிய வாய்ப்புள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி இதுவரை 1912 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார் கோலி. முதலிடத்தில் 1930 ரன்களுடன் பாகிஸ்தான் அணியின் ஜாவித் மியாண்டாட் உள்ளார். இன்றைய போட்டியில் விராட் கோலி 19 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல மேற்கிந்திய தீவுகள் நாட்டில், இந்தியா விளையாடிய போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ராம்நரேஷ் சர்வான் 700 ரன்கள் குவித்து உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 556 ரன்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ராம்நரேஷ் சர்வாணின் சாதனையை முறியடிக்க கோலிக்கு 145 ரன்கள் தேவைப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் இந்தியா விளையாடிய போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் டெஸ்மாண்ட் ஹேன்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 2 சதங்களை அடித்துள்ளனர். இன்னும் ஒரு சதம் அடித்தால் அந்தச்சாதனையை கோலி முறியடிப்பார். இந்திய அணியின் ரன் குவிக்கும் எந்திரமான விராட் கோலி இச்சாதனைகளை எளிதில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories