விளையாட்டு

மற்றவர்கள் மீது புகார் சொல்வது இந்திய அணியில் புது பேஷனாக மாறிவிட்டது - கங்குலி வருத்தம்

ட்ராவிட் மீது அளிக்கப்பட்டுள்ள புகாருக்கு 2 வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டிஸ் அனுப்புயுள்ளதாக பி.சி.சி.ஐ ஓம்பட்ஸ்மன் தலைவர் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் மீது புகார் சொல்வது இந்திய அணியில் புது பேஷனாக மாறிவிட்டது - கங்குலி வருத்தம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆதாயம் தரும் இரு பதவிகள் இருப்பதற்கான காரணத்தை கேட்டு ராகுல் டிராவிட்டிற்கு பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய பிரதேச கிரிக்கெட் அசோஸியேஷனை சேர்ந்த குப்தா என்பவர் அளித்த புகாரின் பேரில் டிராவிட்டிற்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ் குப்தா அளித்த புகாரில், ``தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் ஆதாயம் தரும் இரு பதவிகளில் டிராவிட் இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். டிராவிட் மீது அளிக்கப்பட்டுள்ள புகாருக்கு 2 வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பி.சி.சி.ஐ ஓம்பட்ஸ்மன் தலைவர் ஜெயின் தெரிவித்தார்.

டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்காக கங்குலி ட்விட்டரில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ''இந்திய அணியில் புது பேஷன் உருவாகி உள்ளது. இது செய்திகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான சிறந்த வழி. கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டுக்கு உதவ வேண்டும்'' இவ்வாறு கூறியுள்ளார்.

கங்குலியின் கருத்தை ஹர்பஜன் சிங்கும் ஆமோதித்துள்ளார். கங்குலியின் ட்விட்டை மேற்கோள் காட்டி, இது உண்மையா?? கிரிக்கெட் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. ராகுலை விட சிறந்த நபர் இந்திய கிரிக்கெட்க்கு கிடைக்க மாட்டார்.

இவர்களைப்போன்ற ஜாம்பவான்களுக்கு நோட்டிஸ் அனுப்புவது அவர்களை அவமதிக்கும் செயல். கிரிக்கெட்டை மேம்படுத்த அவர்களின் சேவை தேவை. இந்திய கிரிக்கெட்டைக் கடவுள் காப்பாற்ற வேண்டும் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மற்றவர்கள் மீது புகார் சொல்வது இந்திய அணியில் புது பேஷனாக மாறிவிட்டது - கங்குலி வருத்தம்

முன்னதாக சச்சின், கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோர் மீதும் இதே குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு பதிலளித்த சச்சின், தான் ஆலோசகர் பதவிக்கு மும்பை அணியிடமிருந்து சம்பளம் வாங்குவதில்லை என்றும், இனி ஆலோசனைக்குழுவில் இடம்பெறப் போவதில்லை என்றும் அறிவித்தார். இதே நிலைப்பாட்டையே லட்சுமணனும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories