விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது - இளம் வீரர் சுப்மன் கில் 

இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது என இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது - இளம் வீரர் சுப்மன் கில் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், மூன்று T20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இத்தொடருக்கான வீரர்களை, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இந்த முறை அணியில் நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய 'ஏ' அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அத்தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற சுப்மன் கில் அணியில் சேர்க்கப்படாதது பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. சுப்மன் கில்லை அணியில் எடுக்காமல் கேதார் ஜாதவ் தேர்வு செய்தது குறித்து இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியும் கில் அணியில் சேர்க்கப்படாதது குறித்து தனது ஆதங்கத்தை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து இளம் வீரர் சுப்மன் கில் மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், என்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் நான் இதையே யோசித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நான் தொடர்ந்து ரன்கள் குவித்து தேர்வுக்குழுவை என் பக்கம் ஈர்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் தனக்குப் பெரிய பாடமாக அமைந்தது. தற்போது நல்ல பந்துகளை தடுத்து ஆடி கிரீசில் நீண்ட நேரம் நிற்பதன் முக்கியத்துவத்தைத் தனக்கு இந்தத் தொடர் கற்றுக் கொடுத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories