விளையாட்டு

90ஸ் கிட்ஸ்ன் நாயகன்.. வங்காள புலி.. எவர் க்ரீன் ஹீரோ - ‘தாதா’ கங்குலி பிறந்தநாள் பகிர்வு! #HBDDada

‘’உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்’’ என்பதுதான் கங்குலியின் வெற்றி ஃபார்முலா.

90ஸ் கிட்ஸ்ன் நாயகன்.. வங்காள புலி.. எவர் க்ரீன் ஹீரோ - ‘தாதா’ கங்குலி பிறந்தநாள் பகிர்வு! #HBDDada
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“உள்ளூரில் புலி.. வெளியூரில் எலி” என்ற போர்வைதான் இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச அடையாளமாக இருந்தது. இந்த வரலாற்றையெல்லாம் அழித்து புதிய அத்தியாயம் எழுதியது “பெங்கால் டைகர்” என்று செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி.

மேற்கு வங்க மாநிலத்தில் 1972-ம் ஆண்டு பிறந்தவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி. மேற்கு வங்கத்தில் கிரிக்கெட்டை விட கால்பந்து ரசிகர்கள்தான் அதிகம். கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் அதுதான் எழுதப்படாத விதி. அதற்கேற்ப ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட கங்குலிக்கு தன் அண்ணனைப் பார்த்துதான் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது.

வலது கைப்பழக்கம் கொண்டவர்தான் கங்குலி. ஆனால் தனது கிரிக்கெட் பேட்டிங் பயிற்சியை இடது கை ஆட்டக்காரராக துவங்கினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய சீனியர் வீரர்களே தடுமாறும் ஆடுகளங்களில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்குள் இடம் பிடித்தார். சர்வதேச போட்டிகளில் தான் ஆடிய முதல் போட்டியிலேயே சதமடித்து தன் தேர்வை நியாயப்படுத்தினார்.

90ஸ் கிட்ஸ்ன் நாயகன்.. வங்காள புலி.. எவர் க்ரீன் ஹீரோ - ‘தாதா’ கங்குலி பிறந்தநாள் பகிர்வு! #HBDDada

கங்குலி என்னதான் சிறப்பாக ஆடினாலும் இந்திய அணி வெளிநாட்டு ஆடுகளங்களில் மோசமான தோல்விகளையே கண்டு வந்தது.

1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்குகூட முன்னேறாமல் தோற்று வெளியேறினாலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் கங்குலி 183 ரன்களைக் குவித்தார். அந்த ஆட்டத்தில் கங்குலி ஆடிய அசுர வேக ஆட்டத்தை கண்ட இந்திய ரசிகர்கள் அவரை செல்லமாக “தாதா” என அழைக்க துவங்கினர்.

90ஸ் கிட்ஸ்ன் நாயகன்.. வங்காள புலி.. எவர் க்ரீன் ஹீரோ - ‘தாதா’ கங்குலி பிறந்தநாள் பகிர்வு! #HBDDada

இந்திய அணியை சோதனைக் காலம் சீண்டிப்பார்த்த நேரம். ஊழல் புகார் தலையெடுக்க கேப்டன் அசாரூதினுக்கு தடைவிதிக்கப்பட்டது. மூத்த வீரரான சச்சின் கேப்டனாக்கப்பட்டார். சச்சின் தலைமையில் இந்தியாவும் தோற்றது, சச்சின் எனும் ஆகச்சிரந்த வீரரின் பேட்டிங்கும் தடைபட்டது. சச்சினே கங்குலி கேப்டனாகட்டும் என்று பரிந்துரைத்து வழிவிட்டு நின்றார்.

பழைய வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய வீரர்களைக் கொண்டுவந்தார் கங்குலி. அதன்பிறகே இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம். உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை அந்த நாட்டிலேயே வென்றது. எட்டாவது இடத்தில் இருந்த இந்திய அணியை இரண்டாவது இடத்துக்குக் கொண்டுவந்தார்.

90ஸ் கிட்ஸ்ன் நாயகன்.. வங்காள புலி.. எவர் க்ரீன் ஹீரோ - ‘தாதா’ கங்குலி பிறந்தநாள் பகிர்வு! #HBDDada

லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தின் இமாலய இலக்கான 326 ரன்களை அபாரமாக நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப் போட்டியில் சேஸ் செய்தது இந்திய அணி. வெற்றிக்கான ரன்களை குவித்ததும் அனைவரது கண்களும் லார்ட்ஸ் மைதான பால்கனியை நோக்கி பாய்ந்தது. இந்திய கேப்டன் கங்குலி டி-ஷர்ட்டை கழற்றி கம்பீரமாக சுற்றியது உலக கிரிக்கெட் வரலாற்றின் இன்றியமையாத ஒன்றாக பதிவானது. லார்ட்ஸ் மைதான பால்கனியை 90-ஸ் கிட்ஸின் நாஸ்டாலஜியாக மாற்றியவர் கங்குலி !

கங்குலி தலைமையில் இந்திய அணி முக்கியமான வெற்றிகளை குவித்தது. 1983க்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி சென்றது. இறுதிப்போட்டியில் தோற்றாலும், வலிமையான இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்ற மனநிலையை மற்ற அணிகளின் மனதில் விதைத்தார் தாதா.

90ஸ் கிட்ஸ்ன் நாயகன்.. வங்காள புலி.. எவர் க்ரீன் ஹீரோ - ‘தாதா’ கங்குலி பிறந்தநாள் பகிர்வு! #HBDDada

இதற்குப்பின், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சேப்பலுக்கும் கங்குலிக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அணியிலிருந்தே கழட்டிவிடப்பட்டார். கங்குலி இனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவேண்டியதுதான் என்று எல்லாரும் சொன்னபோது, மீண்டும் அணியில் இடம்பிடித்து, பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமடித்து தனது கிரிக்கெட் வாழ்க்கை முடியவில்லை என்பதை நிரூபித்தார்.

“உலகிற்கு கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நிறைய உதடுகள் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என கூறிவிடும்” என்பதுதான் கங்குலியின் வெற்றி ஃபார்முலா.

தோனி, யுவராஜ், ஹர்பஜன், கைஃப், சேவாக், கம்பீர் , ஜாகிர்கான், நெஹ்ரா என இந்திய அணியின் சிறந்த அணியை உருவாக்கி தந்தவர் கங்குலிதான். 2011 உலகக் கோப்பையை வென்ற அணியில் 80 சதவிகிதம் பேர் கங்குலியின் கண்டுபிடிப்புகள்.

90ஸ் கிட்ஸ்ன் நாயகன்.. வங்காள புலி.. எவர் க்ரீன் ஹீரோ - ‘தாதா’ கங்குலி பிறந்தநாள் பகிர்வு! #HBDDada

ஓய்வுக்கு பின் பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராக, வர்ணனையாளராக கங்குலி தன்னை கிரிக்கெட்டோடு தொடர்பிலேயே இருக்கிறார். இன்றும் ஒரு இடதுகை வீரர் வேகப்பந்து வீச்சில் ஆஃப் சைடில் பந்தை விரட்ட சிரமப்பட்டால், சுழற்பந்து வீச்சாளரை எதிர்கொண்டால் சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வரும் என்னதான் ஆடினாலும் கங்குலி மாதிரி வராது.

ஸ்பின் பாலுக்கு ஒரு ஸ்டெப் வெளியில் வந்தால் சிக்ஸர்தான், 11 பேரும் ஆஃப் சைடுல நின்னாலும் பவுண்டரி அடிப்பாருனு குரல்கள் ஒலிக்க துவங்கும்.

90களில் பிறந்தவர்கள் பலருக்கும் கங்குலிதான் இன்றும் என்றும் ஃபேவரைட். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டவர்கள் பலர். ஆனால், அவர்கள் மனதை எப்போதும் ஆக்கிரமித்து இருக்கும் அவரது ஸ்டைல். கிரிக்கெட்டின் தாதா, கிங் ஆஃப் ஆஃப்சைடு என்று செல்லமாக அழைக்கப்படும் வங்கப்புலி கங்குலியின் பிறந்த தினம் இன்று !

வாழ்த்துகள் தாதா !

banner

Related Stories

Related Stories