விளையாட்டு

வீம்புக்கு பேசிய சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுத்த ஜடேஜா !

சஞ்சய் மஞ்சுரேக்கர் தொலைக்காட்சி வர்ணனையில் ஜடாஜேவை மிகவும் கடுமையாக விமர்சித்த நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்துக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.

வீம்புக்கு பேசிய சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுத்த ஜடேஜா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்பட்டு வருகிறார். இவரது வர்ணனை மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்துடன் இந்தியா தோற்றதையடுத்து சாஹல், குல்தீப் யாதவ் இருவரும் 20 ஓவர்களில் 160 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதனையடுத்து அவரிடம் ஜடேஜாவை அணியில் கொண்டு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “ஜடேஜா ஒரு துண்டு துணுக்கு வீரர். ரவீந்திர ஜடேஜா 50 ஒவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்த நிலையில்தான் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ப்யூர் பவுலர். ஆனால் 50 ஒவர் கிரிக்கெட்டில் என் தெரிவு என்னவெனில் ஒரு பேட்ஸ்மென் மற்றும் ஸ்பின்னர். எதிர்பாராத போட்டி முடிவுகளை வைத்து நாம் முடிவுகளை எடுக்க கூடாது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டி விதிவிலக்கான போட்டி அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்தார்.

ஜடேஜா ஒரு அணியில் இல்லையென்றாலும் பீல்டிங்கில் வந்து அபாரமான கேட்ச்களை எடுப்பார். அவரை அணியில் எடுக்க வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஜடேஜாவை ‘துண்டு துணுக்கு’ வீரர் என்று கூறியதற்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்துக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “நீங்கள் விளையாடியதை விட இருமடங்கு ஆட்டங்களில் நான் ஆடிவிட்டேன், இன்னும் ஆடிக்கொண்டு உள்ளேன். முதலில் சாதனையளர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ‘வெர்பல் டயரியா’ போதும்! ” இவ்வாறுத் தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் இந்த ட்வீட் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஏற்கெனவே, உலகக்கோப்பைக்கான வர்ணனையாளர் பணியில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கையெழுத்து இயக்கம் ஒன்று நடைப்பெற்று வருகிறது. அதில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்க வலியுறுத்தி இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories