விளையாட்டு

இந்திய அணியின் புதிய ஜெர்ஸி வெளியானது - கிரிக்கெட்டையும் காவி மயமாக்குவதாக குற்றச்சாட்டு!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு காவி நிற ஆடை கொடுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு

இந்திய அணியின் புதிய ஜெர்ஸி வெளியானது - கிரிக்கெட்டையும் காவி மயமாக்குவதாக குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

நாளை இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் புதிய ஜெர்ஸியில் இந்திய அணி களம் இறங்க இருக்கிறது. சர்வதேச போட்டியில் களம் காணும் இரு அணிகளும் ஒரே நிற சீருடையில் விளையாடக் கூடாது என ஐசிசி புதிய விதிகளை வகுத்துள்ளது. இதனால் ஏதேனும் ஒரு அணி மாற்று நிற உடை அணிய வேண்டியுள்ளது.

இந்திய அணியின் புதிய ஜெர்ஸி வெளியானது - கிரிக்கெட்டையும் காவி மயமாக்குவதாக குற்றச்சாட்டு!

தற்போது உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தில் நடைபெற இருப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் அணி சீருடையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதனால், இந்திய கிரிக்கெட் அணியின் உடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் புதிய ஜெர்ஸி வெளியானது - கிரிக்கெட்டையும் காவி மயமாக்குவதாக குற்றச்சாட்டு!

இந்திய அணியின் சீருடை காவியும் நீலமும் கலந்தவையாக உள்ளது. கழுத்துப்பகுதியும், முன்பகுதியும் கரும் நீல நிறத்திலும், தோள்பட்டை, பின்புறம் காவி நிறத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இனிவரும் வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளில் இந்திய அணி, இந்த ஜெர்ஸியை தான் அணிந்திருக்கும் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் புதிய ஜெர்ஸி வெளியானது - கிரிக்கெட்டையும் காவி மயமாக்குவதாக குற்றச்சாட்டு!

முன்னதாக புதிய நிற ஜெர்சிக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மோடி அரசு நாட்டை காவி மையமாக்க எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories