விளையாட்டு

உலகக்கோப்பை 2019 : தவான், புவனேஷ்வர் குமாரை தொடர்ந்து விஜய் சங்கருக்கும் காயம் !

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலகக்கோப்பை 2019 : தவான், புவனேஷ்வர் குமாரை தொடர்ந்து விஜய் சங்கருக்கும் காயம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இடம்பெறாத விஜய் சங்கர், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பிடித்தார். தான் வீசிய முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இந்திய அணி நாளை மறுநாள் (22.05.2019) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இதற்காக இந்திய அணியினர் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜஸ்பிரீத் பும்ரா வீசிய பந்து, கால் பெரு விரலை பதம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. விஜய் சங்கர் வலியால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியில் ஏற்கனவே காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் உலககோப்பையிலிருந்து விலகியுள்ளார். மேலும், புவனேஷ்வர் குமாரும் காயமடைந்துள்ளார். இந்நிலையில், விஜய் சங்கரின் காயம் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories