விளையாட்டு

யுக நாயகன் யுவராஜ் : மறக்க முடியாத 5 சிறப்பான ஆட்டங்கள்! #HappyBirthdayYuvi!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு இன்று 38வது பிறந்தநாள் ஆகும். அவரது சிறப்பான ஆட்டங்களில் இருந்து சிலவற்றை தொகுத்து கொடுத்துள்ளோம்.

யுக நாயகன் யுவராஜ் : மறக்க முடியாத 5  சிறப்பான ஆட்டங்கள்! #HappyBirthdayYuvi!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

1. ஐ.சி.சி நாக் அவுட், 2000

யுவராஜ், கிரிக்கெட் உலகை தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த இன்னிங்ஸ் அது. ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்துவீச்சிற்கு இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்ஆகியோர் அவுட் ஆகி இருந்தனர். நம்பிக்கை நட்சத்திரங்களே சோபிக்காத போது இந்த புதுப்பையன் என்ன செய்து விடப்போகிறான் என இந்திய ரசிகர்கள் டி.வியை ஆஃப் செய்ய சென்றார்கள்.

யுக நாயகன் யுவராஜ் : மறக்க முடியாத 5  சிறப்பான ஆட்டங்கள்! #HappyBirthdayYuvi!

ஆனால் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப் போட்டார் யுவராஜ். புதுமுக வீரராக களமிறங்கிய முதல் இன்னிங்சிலயே 80 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அதில் 12 பவுண்டரிகளும் அடங்கும். அவரது ஆட்டத்தினால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு சென்றது. முதல் ஆட்டத்தை போலவே தான் யுவராஜின் கிரிக்கெட் வாழ்வும் அதிரடியாக இருந்தது.

யுக நாயகன் யுவராஜ் : மறக்க முடியாத 5  சிறப்பான ஆட்டங்கள்! #HappyBirthdayYuvi!

2. நாட்வெஸ்ட் முத்தரப்பு போட்டி, 2002

இந்திய அணியின் மறக்கமுடியாத போட்டிகளில் இது ஒன்று. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது இந்திய அணி. இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்கள் சவுரவ் கங்குலி, விரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுலர் ஆகியோரை சொற்ப ரன்களுக்கு அவுட்டாகியது இங்கிலாந்து அணி.

இக்கால ஃபாஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலும் சேஸ் செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்போதைய காலக்கட்டத்தில், அதுவும் டாப் 4 பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன பிறகும் ஒரு பெரிய இலக்கை அடைவது என்பதெல்லாம் பெரும் சாதனை தான்.

இங்கிலாந்து அணி வெற்றி பெரும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யுவராஜ் சிங் மற்றும் கைஃப் ஆகியோர் இணைந்து 121 ரன்கள் சேர்த்தனர். தடுமாறிய அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற யுவராஜ் 69 ரன்கள் எடுத்தார். அப்போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றதும் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கங்குலி மைதானத்தில் சட்டையை கழற்றி சுழற்றியது உலக வைரல்.

யுக நாயகன் யுவராஜ் : மறக்க முடியாத 5  சிறப்பான ஆட்டங்கள்! #HappyBirthdayYuvi!

3. டி-20 உலகக்கோப்பை, 2007

2007 டி-20 உலகக்கோப்பைக்கு முன் 50 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. 2007 டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி மூத்த வீரர்களின்றி இளம்படையுடன் களமிறங்கியது. யுவராஜ் சிங் அவரது திறன்களை வெளிப்படுத்த மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சூப்பர்-எட்டு ஆட்டத்தில் இந்திய அணி 136 ரன்களுக்கு விக்கெட் ஏதுமின்றி இருந்தது. அடுத்த 19 ரன்கள் வித்தியாசத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது. அப்போது யுவராஜ் சிங் களமிறங்கினார்.

யுவராஜ் சிங்கிற்கும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃபிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தை முழுவதும் பேட்டிங்கில் வெளிப்படுத்தினார். ஸ்டுவர்ட் பிராட் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார், அதை தொடர்ந்து ஐந்து பந்துகளிலும் ஐந்து சிக்ஸர் அடித்தார்.

இதன் மூலம் யுவராஜ் 12 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தார். அந்த சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. இந்திய அணி 2007 டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்றதற்கு இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியும், அசைக்க முடியாது என கருதப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரை இறுதியில் 30 பந்துகளில் விலாசிய 70 ரன்கள், என இரண்டு இன்னிங்ஸ்களும் உதவியது.

யுக நாயகன் யுவராஜ் : மறக்க முடியாத 5  சிறப்பான ஆட்டங்கள்! #HappyBirthdayYuvi!

4. இங்கிலாந்து டெஸ்ட், 2008

யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகள் மட்டுமே நன்றாக விளையாடுவார் என்ற கருத்து நிலவியது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் அதை உடைத்தார். அந்த ஆட்டம் அவரது சிறந்த இன்னிங்ஸில் ஒன்றாக அமைந்தது. இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு 387 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது.

அப்போட்டியில் இந்திய அணி தோல்விடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங்கின் அசத்தலான பார்டனர்ஷிப், ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இந்தியா மறக்கமுடியாத வெற்றியைக் கண்டது. சச்சின் டெண்டுல்கர் 103 ரன்கள் எடுத்தார். யுவராஜ் 85 ரன்கள் எடுத்து வெற்றிக்கு துணை நின்றார்.

யுக நாயகன் யுவராஜ் : மறக்க முடியாத 5  சிறப்பான ஆட்டங்கள்! #HappyBirthdayYuvi!

5. 2011 உலகக்கோப்பை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜின் இரண்டு இன்னிங்ஸ்கள் முக்கிய கவனம் பெற்றவை. ஒன்று 2007 டி20 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி. மற்றொன்று 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பையின் காலிறுதிப் போட்டி. அந்த உலகக் கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய யுவராஜ் சிங் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார்.

2011ம் ஆண்டு உலககோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கால்-இறுதி ஆட்டத்தின் போது அவரது முழு செயற்திறன் வெளிப்பட்டது. அந்த ஆட்டத்தில் அவர் இரண்டு விக்கெட் வீழ்த்தியதுடன் அரைசதமும் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

banner

Related Stories

Related Stories