விளையாட்டு

உலக கோப்பை 2019 : தோள்பட்டை காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன் விலகல் !

தோள்பட்டை காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விளக்கியுள்ளார்.

உலக கோப்பை 2019 : தோள்பட்டை காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன் விலகல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தது உள்ளது. இந்நிலையில், அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டியின் போதே, தோள்பட்டை காயம் காரணமாக பங்கேற்கவில்லை. தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக ஸ்டெய்னிற்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெரான் ஹென்ட்ரிக்கஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்டெயின் வலைபயிற்சியில் சில பந்துகளை வீசினார் இருபின்னும் காயத்தின் தன்மையை ஆராய்ந்து அவர் விலகுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த காயம் ஸ்டெயினின் உலகக் கோப்பை கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 35 வயதான ஸ்டெயினுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories