விளையாட்டு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இன்று களமிறங்கும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணியை இன்று எதிர்கொள்கிறது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இன்று களமிறங்கும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

12வது உலக கோப்பை தொடர் கடந்த மாதம் 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் மதியம் 3 மணி அளவில் தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றது இருப்பினும் வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 359 ரன்கள் குவித்து எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நிலைத்து நின்று வலுவான தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையில் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பூம்ராவின் அசத்தலான வேகப்பந்துவீச்சும், குல்தீப் - சாஹல் சுழல் கூட்டணியும் இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டுகளாக இருக்கும். இந்திய அணி இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக யாரை களமிறக்க போகிறது என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அணி உத்தேச பட்டியல் : ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், தோனி, கேதர் ஜாதவ் அல்லது விஜய் சங்கர் , ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி அல்லது புவனேஷ்வர் குமார்.

இரண்டு ஆட்டங்களில் விளையாடி உள்ள தென்ஆப்பிரிக்க அணி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது தென்னாப்பிரிக்க அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் இங்கிடியும் சில ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைமையில் இருக்கிறார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் பிளிஸ்சிஸ், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஆகியோரை தான் அந்த அணி மலைபோல் நம்பி உள்ளது. இவர்களை சீக்கிரம் அவுட் செய்து விட்டால் தென்னாபிரிக்க அணி பாடு திண்டாட்டம் தான்.நாளைய போட்டியில் தொடக்க வீரர் ஹசிம் அம்லா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி உத்தேச பட்டியல் : டி காக், அம்லா, மார்க்ரம், டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டுமினி , டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் , பெலக்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர்.

banner

Related Stories

Related Stories