விளையாட்டு

'அடுத்த வருடம் மீண்டும் வருவோம்,கோப்பையை வெல்வோம் ' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி! (வீடியோ)

ஷேன் வாட்சன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'அடுத்த வருடம் மீண்டும் வருவோம்,கோப்பையை வெல்வோம்  ' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2019-ம் ஆண்டுக்கான 12வது ஐ.பி.எல். சீசன் இறுதிப்போட்டி மே 12ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கில் இறங்கிய மும்பை அணி வீரர்கள் சென்னை அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தில் 149 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவுக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் களம் கண்ட சி.எஸ்.கே. அணி, முதல் விக்கெட் போனதும் ஷேன் வாட்சன் இறங்கினார். இவரது அபார ஆட்டத்தால் சி.எஸ்.கே.வுக்கு பெரும் பலமே கிடைத்திருந்தது என்று கூறலாம். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மனம் தளராமல் 19வது ஓவர் வரை ஷேன் வாட்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பின்னர் 20வது ஓவரில் ரன் அவுட் ஆனார் வாட்சன். இதனையடுத்து 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி வென்றது.

இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஷேன் வாட்சனின் இடது காலின் முட்டியில் ரத்தம் வழிந்தபடி இருந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

'அடுத்த வருடம் மீண்டும் வருவோம்,கோப்பையை வெல்வோம்  ' - ஷேன் வாட்சன் நெகிழ்ச்சி! (வீடியோ)

அதில், போட்டியினிடையே வாட்சனுக்கு முட்டியில் அடிபட்டுள்ளது. அதனை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து ஆட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார். போட்டி முடிந்த பின்னர் வாட்சனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவருக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் ஹர்பஜன் அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.

வாட்சனின் அபார ஆட்டமும், அவரது செயலும் சி.எஸ்.கே. ரசிகர்கள் மட்டுமில்லாமல் நெட்டிசன்களையும் மிகவும் பிரமிக்க வைத்துள்ளது. முட்டியில் அடிபட்டு ரத்தம் வழிவது போன்ற வாட்சனின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலானது. இந்த அர்ப்பணிப்பு உணர்வுக்காக, ஷேன் வாட்சனை கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில் தன்னை பாராட்டிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ ஒன்றை வாட்சன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. மும்பை அணியுடான போட்டியில் வெற்றி பெற இயலவில்லை. ஆனால், அடுத்த வருடம் மீண்டும் வருவோம்,கோப்பையை வெல்வோம் " என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories