விளையாட்டு

IPL 2019:நான்காவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் ? மும்பை சென்னை அணிகள் பலப்பரீட்சை!

ஐதராபாத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணி சென்னை அணி பலப்பரீச்சை நடத்துகின்றன.

IPL 2019:நான்காவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் ? மும்பை சென்னை அணிகள் பலப்பரீட்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த 2-வது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி 8-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இரு அணிகளுமே ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்று உள்ளன. இதனால் 4-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணி 8-வது முறையாகவும், மும்பை அணி 5-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

இரு அணிகளும் ஏற்கனவே இறுதிப்போட்டியில் மூன்று முறை சந்தித்துள்ளன அதில் இரண்டு முறை மும்பை அணியும், சென்னை அணி ஒரு முறை வென்றுள்ளது. இந்நிலையில், சி.எஸ்.கே அணிக்கு இறுதிப்போட்டியில் கண்டம் இருப்பதாக கடந்த கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பை அணி, நடப்பு சீசனில் குவாலிஃபையர் போட்டி உள்பட சி.எஸ்.கே-வை 3 முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories