விளையாட்டு

இந்திய அணி இந்த முறை உலககோப்பையை வெல்லும் - முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை! 

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்திய அணி இந்த முறை உலககோப்பையை வெல்லும் - முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீகாந்த் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி சிறந்த முறையில் தயாராகி உள்ளது.

உலகக் கோப்பைக்கு முன்னதாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வீரர்களை எந்தவகையிலும் பாதிக்காது என்று கூறிய ஸ்ரீகாந்த், தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

‌இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories