விளையாட்டு

IPL 2019 : பஞ்சாப்பை வீழ்த்தியது பெங்களூரு அணி!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

IPL 2019 : பஞ்சாப்பை வீழ்த்தியது பெங்களூரு அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடரில் நேற்றிரவு பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.பெங்களூரு அணியில் ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார்.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் பார்த்திவ் பட்டேல் 43 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த டிவில்லியர்சும், ஸ்டாயினிசும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர்.முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தனர். இவர்களின் அதிரடியால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.

IPL 2019 : பஞ்சாப்பை வீழ்த்தியது பெங்களூரு அணி!

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைக் குவித்தது. டிவில்லியர்ஸ் 82 ரன்களுடனும், ஸ்டாய்னிஸ் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.அஸ்வின் , முருகன் அஸ்வின், முகமது ஷமி, வில்ஜோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி அதிரடியில் மிரட்டியது. கிறிஸ் கெய்ல் 23 ரன்களும், மயங்க் அகர்வால் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 42 ரன்களும் எடுத்னர்.

IPL 2019 : பஞ்சாப்பை வீழ்த்தியது பெங்களூரு அணி!

17-வது ஓவர் வரை பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது. இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் மேலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர்.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 17 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வியாகும்.

banner

Related Stories

Related Stories