விளையாட்டு

IPL 2019 : ராஜஸ்தான் அணியுடன் மோதும் டெல்லி அணி !

ஐ.பி.எல் தொடரில் இன்றிரவு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

IPL 2019 : ராஜஸ்தான் அணியுடன் மோதும் டெல்லி அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ராஜஸ்தான் அணிக்கு உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஸ்டீவன் சுமித்
ஸ்டீவன் சுமித்

கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே மாற்றப்பட்டு ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம்.

பேட்டிங்கில் பட்லர் (311 ரன்), சுமித் (245 ரன்), சாம்சன் (234) ஆகியோரும், பந்து வீச்சில் ஆர்ச்சர் (11 விக்கெட்), ஷிரேயாஸ் கோபால் (10 விக்கெட்)ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.பட்லர் லண்டன் சென்றுள்ளதால் இந்த போட்டியில் ஆடமாட்டார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. ராஜஸ்தானை வீழ்த்தி 7-வது வெற்றியை டெல்லி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்திற்கு முன்னேறும்.

பேட்டிங்கில் தவான் (347 ரன்), கேப்டன் ஹிரேயாஸ் அய்யர் (327 ரன்), ரி‌ஷப் பந்த் (258 ரன்) ஆகியோரும் , பந்து வீச்சில் ரபாடா (21 விக்கெட்), கிறிஸ் மோரிஸ் (11 விக்கெட்) ஆகியோரும் பௌலிங்கிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories