விளையாட்டு

கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாவுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ. நடவடிக்கை!

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது பி.சி.சி.ஐ.

கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியாவுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் - பி.சி.சி.ஐ. நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலும், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் பங்கேற்றனர்.

அதில் பிரபல இயக்குநரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான கரண் ஜோஹர் கேட்ட கேள்விக்கு பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் இருவரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் பாண்டியா மற்றும் ராகுலை சஸ்பெண்ட் செய்தது பி.சி.சி.ஐ. நிர்வாகம்.

இதனையடுத்து இருவரும் மன்னிப்பு கேட்டதால் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டனர். அதோடு மட்டுமல்லாமல் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது.

கரண் ஜோஹருடன் கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்டியாவும்
கரண் ஜோஹருடன் கே.எல்.ராகுலும், ஹர்திக் பாண்டியாவும்

இந்த விசாரணை இறுதிகட்டத்தை எட்டியதை அடுத்து கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி பி.சி.சி.ஐ உத்தரவிட்டுள்ளது.

இந்த அபராதத் தொகையை 4 வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும், 20 லட்சத்தில் ராணுவத்தில் உயிரிழந்த 10 ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம் 10 லட்சமும், மீதமுள்ள 10 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் வளர்ச்சிக்காக அளிக்க வேண்டும் எனவும் இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத் தொகையைச் செலுத்த காலம் தாழ்த்தினால் அதற்கும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பி.சி.சி.ஐ எச்சரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories